தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனருக்கு கூடுதல் அதிகாரம் – பெண் பயணிகள் பாதுகாப்பு!

0
தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனருக்கு கூடுதல் அதிகாரம் - பெண் பயணிகள் பாதுகாப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனருக்கு கூடுதல் அதிகாரம் - பெண் பயணிகள் பாதுகாப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனருக்கு கூடுதல் அதிகாரம் – பெண் பயணிகள் பாதுகாப்பு!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு எதிராக ஆண்கள் வன்முறை செயல்களில் ஈடுபட்டால் அவர்களை தடுப்பதற்காக பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு:

தமிழக அரசு மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளை கலைவதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்கவும், பெண்கள் மீது நடக்கும் வன்முறை தடுப்பது போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக பல முக்கிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடையும் வகையில் அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்வதற்கு திட்டங்களை வைத்துள்ளது. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் பெண்களுக்கு உதவும் வகையில் தான் அமைக்கப்படுகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் தொகுப்பு புகார் தெரிவிக்க வசதி!

இந்நிலையில், தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும், சீண்டல்களையும் தடுக்கும் வகையில் அரசு தற்போது ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுப்பதில் ஓட்டுனருக்கு உள்ள பொறுப்புகளை தமிழக அரசு வரையறுத்து வரைவு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் அரசிதழில் பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணி ஒருவர், பெண் பயணிக்கு எதிராக பாட்டு பாடியும், விசில் அடித்தும், அவதூறு வகையிலான வார்த்தைகளால் பேசியும், கைபேசியில், வீடியோ போட்டோ எடுத்தால் போன்ற செயல்களில் ஈடுபடும்போது ஓட்டுநர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தொடர்புடையவர் மீது புகார் அளிக்க முடியும்.

தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் – முதல்வர் அறிவிப்பு!

சரியான காரணங்கள் இருந்தால் ஒரு நபரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க ஏதுவாக பேருந்துகளில் புகார் புத்தகம் வைக்க வேண்டும் என்றும் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு தொடர்பான ஆட்சேபனை மற்றும் கருத்துக்களை தமிழக தலைமை செயலகத்தில் உள்ள உள்துறை செயலரிடம் தெரிவிக்கலாம் என்றும் அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!