PAN, ஆதார் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு! பொதுமக்கள் கவனத்திற்கு!

0
PAN, ஆதார் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு! பொதுமக்கள் கவனத்திற்கு!
PAN, ஆதார் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு! பொதுமக்கள் கவனத்திற்கு!
PAN, ஆதார் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு! பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க மார்ச் 31 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்காதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் – ஆதார் இணைப்பு:

இந்தியாவில் ஆதார், பான், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை முக்கிய ஆவணங்களாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக தற்போது ஆதார் இல்லை என்றால் எந்த ஒரு வேலையும் நடக்காது என்ற நிலை உள்ளது. ஆதார் தனிப்பட்ட தேவைகளுக்கும், அரசு சார்ந்த வேலைகளுக்கும் அவசிய ஒன்றாக உள்ளது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெறவும் இந்த ஆதார் கார்டு அவசியமாகும். அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படும் ஆதார் கார்டை அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும்.

ஏப்ரல் 1 முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – முழு பட்டியல் இதோ!

ஆதாருக்கு அடுத்த நிலையில் முக்கிய ஆவணமாக பான் கார்டு விளங்குகிறது. 10 இலக்க எண்களை கொண்ட நிரந்தர கணக்கு எண் பான் கார்டு ஆகும். இந்த பான் மற்றும் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து வங்கி பரிவர்தனைகளுக்கும், அரசின் வரிகளை செலுத்துவதற்கும் பான் அவசியமாகும். வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு செப்டம்பர் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடப்பு 2022 ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் மார்ச் 31, 2023 வரை கால அவகாசம் வழங்கி நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!