ஏப்ரல் 1 முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – முழு பட்டியல் இதோ!

0
ஏப்ரல் 1 முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - முழு பட்டியல் இதோ!
ஏப்ரல் 1 முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - முழு பட்டியல் இதோ!
ஏப்ரல் 1 முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – முழு பட்டியல் இதோ!

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப் பட்டியலின்படி, ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வரிசையாக 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தொடர்பான சேவைகளை மாற்றியமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

2022-23ம் புதிய நிதியாண்டு நாளை (ஏப்ரல் 1) துவங்க இருப்பதால், வங்கி ஊழியர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையுடன் புதிய மாதம் தொடங்குகிறது. அதேசமயம் வார இறுதி நாட்கள் உட்பட பல்வேறு விடுமுறைகள் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் மாதம் முழுவதும் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். தவிர ஏப்ரல் மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட இருக்கின்றன.

TCS, Wipro, Infosys, HCL உள்ளிட்ட IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work From Home!

இதனால் வங்கி கிளைக்கு செல்ல வேண்டிய வேலை ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதை சரியான நேரத்தில் மாற்றியமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கிகள் அடைக்கப்படும் இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் சேவையை பெற்றுக் கொள்ள முடியும். இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப் பட்டியலின்படி, ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வங்கி கிளைக்கு செல்ல வேண்டியது அவசியம் என்றால் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்கான வங்கி விடுமுறை பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

வங்கி விடுமுறை பட்டியல்:

  • ஏப்ரல் 1 – வங்கி ஆண்டு கணக்கு முடிவு (அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
  • ஏப்ரல் 2 – குடி பத்வா/முதல் நவராத்திரி/உகாதி பண்டிகை/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா விடுமுறை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • ஏப்ரல் 3 – ஞாயிறு வார விடுமுறை
  • ஏப்ரல் 4 – சார்ஹூல் காரணமாக ஜார்க்கண்டில் வங்கி மூடப்படும்.
  • ஏப்ரல் 5 – ஹைதராபாத்தில் பாபு ஜக்ஜீவன் ராம் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும்.
  • ஏப்ரல் 9 – 2வது சனிக்கிழமை
  • ஏப்ரல் 10 – ஞாயிறு வார விடுமுறை

  • ஏப்ரல் 14 – டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி / மகாவீர் ஜெயந்தி / பைசாகி / தமிழ் புத்தாண்டு / பிஜு / பிஹு விடுமுறை காரணமாக மேகாலயா மற்றும் இமாச்சல பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • ஏப்ரல் 15 – புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு / ஹிமாச்சல் தினம் / பிஜு / பிஹூ காரணமாக ராஜஸ்தான், ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர மற்ற இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 16 – போஹாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு அசாமில் வங்கிகள் மூடப்படும்
  • ஏப்ரல் 17 – ஞாயிறு வார விடுமுறை
  • ஏப்ரல் 21 – காடியா பூஜையை முன்னிட்டு அகர்தலாவில் வங்கிகள் மூடப்படும்
  • ஏப்ரல் 23 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
  • ஏப்ரல் 24 – ஞாயிறு வார விடுமுறை
  • ஏப்ரல் 29 – ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடாவை முன்னிட்டு ஜம்மு மற்றும் காஷ்மீரில் வங்கிகள் மூடப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!