உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடம் – அமைச்சர் பெருமிதம்!

0
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடம் - அமைச்சர் பெருமிதம்!

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

உடல் உறுப்பு தானம்:

இன்றைய கால கட்டத்தில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் உள்ளது. இருப்பினும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இது போன்ற உடல் உறுப்பு தானம் செய்வதால் நோயால் உடல் உறுப்பு செயல் இழந்தவர்களுக்கு பயன்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடலில் உள்ள உறுப்புகளை வீணாக்காமல் தானம் செய்வதால் பலரது உயிர் காக்கப்படும் என்றும் பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அக்‌ஷய திருதியை முன்னிட்டு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் இதோ!

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு 156 பேர் மற்றும் 2023ம் ஆண்டு 178 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்றும் நடப்பு ஆண்டில் இதுவரை 130 நாட்களில் 102 உடல் உறுப்பு தானம் நடைபெற்றது என்றும் கடந்த 6, 7 ஆண்டுகளில் இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!