TCS, Wipro, Infosys, HCL உள்ளிட்ட IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work From Home!

0
TCS, Wipro, Infosys, HCL உள்ளிட்ட IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் Work From Home!
TCS, Wipro, Infosys, HCL உள்ளிட்ட IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் Work From Home!
TCS, Wipro, Infosys, HCL உள்ளிட்ட IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work From Home!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் கொரோனா தொற்று பரவல் அபாயம் குறைந்து இயல்பு நிலை மீண்டும் திரும்பியுள்ளதால் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Work From Home:

கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியதால் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வாய்ப்புகளை அளித்தது. இருப்பினும், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாலும், பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் மீண்டுள்ளதாலும் பெரிய நிறுவனங்கள் இப்போது தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கின்றன. ஆனால், புதிய வழக்கம் என்ற மாற்றத்துடன் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஹைப்ரிட் ஒர்க் மாடலைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் பெரிய ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் ஐந்து நாட்களும் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.

திருப்பதி செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 1 முதல் சிறப்பு தரிசனம்! தேவஸ்தானம் அனுமதி!

ஹைப்ரிட் ஒர்க் மாதிரியில், பணியாளர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும், மீதமுள்ள நாட்கள் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். டிசிஎஸ் ஹைப்ரிட் வேலை மாதிரியைத் தொடரத் திட்டமிட்டுள்ள ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது. உலகம் முழுவதும் கோவிட் நிலைமை மேம்பட்டு வருவதால், தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் கலப்பின வேலை முறைக்கு மாறுகிறது என்று டிசிஎஸ் சமீபத்தில் செய்தி ஒன்றில் கூறியுள்ளது.

TCS இன் 25/25 மாதிரியின் படி, நிறுவனம் அதன் பணியாளர்களில் நான்கில் ஒரு பகுதியினரை மட்டுமே தங்கள் அலுவலகங்களில் பணிபுரிய அனுமதிக்கிறது. TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஐடி நிறுவனம் எதிர்கால மாற்றம் எங்கிருந்தும் வேலை செய்யும் நெகிழ்வுத்தன்மையுடன் ஒரு கலப்பின மாதிரியாக இருக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளது. பணியிடங்கள் மற்றும் வேலை செய்யும் முறையின் பரிணாமம் குறுகிய கால மாற்றம் மட்டுமல்ல, புதிய உலகிற்கு ஒரு புரட்சி என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!