IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட KL ராகுல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட KL ராகுல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட KL ராகுல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட KL ராகுல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த ஆண்டு தொடங்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் IPL தொடரில் 2 புதிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் KL ராகுலை லக்னோ அணி 17 கோடிக்கு ஏலம் எடுத்து தக்க வைத்துக் கொண்டது. IPL யின் சிறந்த வீரர்களான தோனி மற்றும் கோஹ்லியை விட KL ராகுல் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்டது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி:

இந்தியன் பிரீமியர் லீக் IPL யில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன . ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக அகமதுபாத், லக்னோ ஆகிய இரண்டு அணிகளும் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில் லக்னோ அணி ஹர்திக் பாண்டியா, கில் , ரஷித் கான் ஆகிய 3 வீரர்களையும் தக்கவைத்துக்கொண்டது. இதை தொடர்ந்து அகமதாபாத் அணி KL ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் , லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆகியோரை தக்கவைத்துக்கொண்டது.

மாநிலம் முழுவதும் குடியிருப்பு பள்ளிகள் & விடுதிகள் மீண்டும் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

இதற்கு முன் IPL தொடரில் முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி 16 கோடிக்கு ஏலம் போனார். தோனி தான் IPL தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் ஆவர். இதைத்தொடர்ந்து கடந்த IPL 8 வது சீசனில் விராட் கோஹ்லி 16 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. தற்போது KL ராகுலை லக்னோ அணி 17 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. IPL வரலாற்றில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட பேட்ஸ்மேனாக தற்போது KL திகழ்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் 9.2 கோடி ரூபாய்க்கும், லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் 4 கோடி ரூபாய்க்கும் லக்னோ அணிக்கு ஒப்பந்தமாகி உள்ளனர்.

Post Office 5 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் வரை பெறலாம் – ஓய்வூதியதாரர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டம்!

பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூரில் திட்டமிடப்பட்ட மெகா ஏலத்தில் 2 அணிகளும் மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளன. இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் IPL கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு IPL போட்டிகள் துபாயில் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டு கூடுதலாக 2 அணிகள் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!