கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் கட்டாயம் – ஆசிரியர்கள் கோரிக்கை மனு!!

0
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் கட்டாயம் - ஆசிரியர்கள் கோரிக்கை மனு!!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் கட்டாயம் - ஆசிரியர்கள் கோரிக்கை மனு!!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் கட்டாயம் – ஆசிரியர்கள் கோரிக்கை மனு!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் குறித்து மத்திய அரசு ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மேல் விரும்பினால் மட்டுமே இந்த திட்டத்தை கொண்டுவர முடியும் என்று கூறிய நிலையில், தற்போது கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரை, தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, முதல்வர் பழனிசாமியிடம் மனு அளித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடம்:

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடத்தை கற்பிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்திய அரசு அனைவரும் விருப்பப்பட்டால் மட்டுமே தமிழ் மொழியை கொண்டுவர முடியும் என தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டில் தமிழை கற்பது அடிப்படை உரிமை அதை தடுப்பது தவறான விஷயம் என்று தெரிவித்தனர்.

தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்று முதுகலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு மனு ஒன்றை தமிழக முதல்வரிடம் அளித்தார. அந்த மனுவில், “தமிழக அரசு அறிவித்திருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள்ள 7.5% இடஒதுக்கீடு திட்டத்தை உயர்த்தி 10 சதவீதமாக்க வேண்டும். மேலும் உயர்த்தி உயர்த்தப்பட்ட 2.5% இடங்களை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

100% பணியாளர்களுடன் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை – தமிழக அரசு அறிவிப்பு!!

மாநில அளவிலான முதுகலை ஆசிரியர் மூப்பு பணிக்கான திருத்தப்பட்ட பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும். நேரடியாக பணி நியமனம் செய்யும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பு இடஒதுக்கீடு உள்ளவர்களுக்கு 40 எனவும், இடஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு 45 ஆக மாற்றப்பட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும். கடந்த 2019 ஜனவரியில் நடந்த சி.பி.எஸ் ஒழிப்பு ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கு பெற்ற ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை, உடனடியாக தமிழக அரசு திரும்ப பெறவேண்டும். மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடங்கள் கொண்டு வர மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்”, என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!