அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42.5% உயர்வு – மாஸ் காட்டும் மாநில அரசு!

0
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42.5% உயர்வு - மாஸ் காட்டும் மாநில அரசு!

கர்நாடக அரசு தனது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.

அகவிலைப்படி 42.5% உயர்வு:

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, கர்நாடக அரசு தனது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3.75% அகவிலைப்படியை (DA) 2024 ஜனவரி 1 முதல் உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மார்ச் மாத சம்பளத்துடன் நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என தற்போது தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அரசு ஊழியர்களின் மொத்த அடிப்படை சம்பளத்தில் 38.75% லிருந்து 42.5% ஆக அகவிலைப்படி உயர்ந்து உள்ளது. கூடுதலாக, யுஜிசி, ஏஐசிடிஇ, ஐசிஏஆர் மற்றும் ஜேஎன்பிசி ஊதிய விகிதங்களின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு தற்போதுள்ள 46% DA வில் இருந்து 50% ஆக அரசு உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் மாநில கருவூலத்திற்கு ஆண்டுக்கு ₹1,793 கோடி இழப்பு ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!