படப்பிடிப்பு போக மீதிநேரத்தில் IT கம்பெனியில் பணியாற்றும் கண்ணம்மா – ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!

0
படப்பிடிப்பு போக மீதிநேரத்தில் IT கம்பெனியில் பணியாற்றும் கண்ணம்மா
படப்பிடிப்பு போக மீதிநேரத்தில் IT கம்பெனியில் பணியாற்றும் கண்ணம்மா

படப்பிடிப்பு போக மீதிநேரத்தில் IT கம்பெனியில் பணியாற்றும் கண்ணம்மா – ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!

பாரதி கண்ணம்மா தொடரில் புதிதாக கண்ணம்மாவாக அறிமுகமாகியுள்ள வினுஷா தேவி IT கம்பெனி ஒன்றிலும் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாகவே கண்ணம்மாவாக வினுசா தேவி இந்த தொடரில் அறிமுகமானார். இவர் ரோஷினி அளவுக்கு இல்லை என ரசிகர்கள் பலரும் குறைகூறி வந்தனர். ஆரம்பத்தில் இவரது நடிப்பு மக்களுக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை என்றாலும் நாளைடைவில் வினுசா தேவியும் மக்களின் மத்தியில் பிரபலமாக தொடங்கி விட்டார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்யாவாக நடிப்பவர் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

பாரதியும், கண்ணம்மாவும் இணைவார்களா? இல்லையா? என பல எதிர்பார்ப்புகளுடன் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெண்பாவும் சில நாட்களுக்கு முன்பாகவே பிரசவத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் இணைந்து கொண்டார். தற்போது சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மா தற்போது இந்த சீரியலில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது நான் கருப்பாகவும், உயரமாகவும் இருப்பேன். இதனால் பலரும் எனது உருவத்தை பார்த்து கேலி செய்தனர்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

இந்நிலையில் எனக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது மக்கள் அனைவரும் என்னை முழு மனதோடு கண்ணம்மாவாக ஏற்று கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். மேலும் வினுஷா தேவி குறித்தான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வினுஷா இரவு நேரத்தில் IT கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நாள் முழுக்க படப்பிடிப்பில் இருந்து விட்டு இரவில் IT துறையில் பணியாற்றி வருகிறார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!