பாரதிக்கு விருது கிடைக்க கண்ணம்மா தான் காரணம் – உண்மையை தெரிந்து ஷாக்கான பாரதி!

0
பாரதிக்கு விருது கிடைக்க கண்ணம்மா தான் காரணம் - உண்மையை தெரிந்து ஷாக்கான பாரதி!
பாரதிக்கு விருது கிடைக்க கண்ணம்மா தான் காரணம் - உண்மையை தெரிந்து ஷாக்கான பாரதி!
பாரதிக்கு விருது கிடைக்க கண்ணம்மா தான் காரணம் – உண்மையை தெரிந்து ஷாக்கான பாரதி!

பாரதி தற்போது விக்ரம் மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்துள்ளார். சிறந்த மனிதநேய மருத்துவர் என்கிற விருது பாரதிக்கு கிடைத்தது கண்ணம்மாவால் தான் என்கிற விஷயத்தை பாரதி அறிந்துகொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதி எப்போது தான் DNA டெஸ்ட் எடுத்து கண்ணம்மா எந்த தவறும் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். என்ன தான் கண்ணம்மாவை பாரதி வெறுத்தாலும் பாரதி அதிகமாக கண்ணம்மாவுடன் தான் நேரம் செலவிட்டு வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து நிரூப் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் கேள்விக்கு பதில்!

தற்போது சௌந்தர்யாவின் நண்பனான விக்ரம் புதிதாக சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு சமூக சேவைகள் செய்ய வேண்டும் என்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். பாரதிக்கும் சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருப்பதால் அவருடைய டீம்மில் சேர்த்துக்கொள்ள நினைக்கிறார். அதாவது பாரதி அவரால் முடிந்த உதவிகளை பல ஏழை மக்களுக்கு செய்திருக்கிறார் மற்றும் பல ஊர்களுக்கு சென்று இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார். இதனால் விக்ரம் மருத்துவமனையிலேயே பாரதி தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்துள்ளார்.

அனைத்து சீரியலிலும் ஒரே காட்சி தானா? விஜய் டிவியை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

அதே மருத்துவமனையில் தான் கண்ணம்மாவும் அட்மின் ஆபீசராக பணியில் சேர்ந்துள்ளார். ஒரே மருத்துவமனையில் தான் இருவரும் வேலை செய்ய வேண்டுமா என பாரதி கடுப்பாகுகிறார். பின்பு, சௌந்தர்யாவிடம் சென்று கண்ணம்மா ஏன் இங்கே வந்தார் என கத்துகிறார். பின்பு, பாரதியிடம் சௌந்தர்யா நீ சிறந்த மனிதநேய மருத்துவர் என்கிற விருது வாங்கியதற்கு, தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பொறுப்பேற்றதிற்கும் கண்ணம்மா தான் காரணம் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!