நடப்பு நிகழ்வுகள்- 25 ஜூலை 2023

0
நடப்பு நிகழ்வுகள்- 25 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள்- 25 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள்- 25 ஜூலை 2023

தேசிய செய்திகள்

குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையானது JJM டிஜிட்டல் அமைப்பை அமைத்துள்ளது.

  • ஜூலை 21 அன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய மாநாட்டின் போது, “JJM டிஜிட்டல்” அமைப்பை நிறுவுவதற்காக குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையானது எக்கோ இந்தியா அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த அமைப்பானது தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
  • JJM டிஜிட்டல் அமைப்பின் இணையத்தளமானது மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மத்திய அரசின் நோக்கங்களை அடைவதில் திறம்பட பங்களிக்க தேவையான அறிவு மற்றும் திறன்களை தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜாய்தேப்பூர் ரயில் சேவையை மேம்படுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதலுக்காக இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

  • டாக்காவில் உள்ள ரயில் பாபன் நகரின் டாக்கா-டோங்கி-ஜாய்டெப்பூர் ரயில்சேவை பாதைக்கு கணினி அடிப்படையிலான இன்டர்லாக் சிக்னலிங் அமைப்பை நிறுவுவதல் மற்றும் ஏற்கனவே உள்ள அமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ஜூலை 23 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • வங்கதேச ரயில்வே அமைச்சர் எம்.டி. நூருல் இஸ்லாம் முன்னிலையில் இந்த ஒப்பந்தமானது கையெழுத்தானது. நாட்டின் ரயில்சேவையின் நெரிசலைக் குறைக்கும் என்றும் வங்கதேசத்தின் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றான டாக்கா-டோங்கி-ஜாய்ட்போர் பகுதியின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

G20 பேரிடர் குறைப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதி மாநாடானது சென்னையில் தொடங்கியுள்ளது.

  • இந்தியாவின் தலைமையில் பேரிடர் அபாயக் குறைப்பு உச்சிமாநாடு தொடர்பான 3வது மற்றும் இறுதி G20 பணிக்குழு கூட்டமானது சென்னையில் ஜூலை 24 அன்று தொடங்கியது.
  • பேரிடர் இடர் குறைப்பு பிரிவின் ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி திருமதி. மாமி மிசுடோரி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தவிர்க்கப்பட்ட பேரழிவுகளில் ஈவுத்தொகையை உருவாக்குதல் மற்றும் பின்னடைவுக்கான முதலீடுகள் மூலம் தடுப்பு மற்றும் இடர் குறைப்புக்கான வளங்கள் மற்றும் திறன்களை அவசரமாக மேம்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • ரூ.1,188.36 கோடி மதிப்பிலான 36 மாநில அரசு தொழில்நுட்ப நிறுவனங்களை “இண்டஸ்ட்ரி 4.0” எனப்படும் நவீன தொழில்நுட்ப மையங்களாக மாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சத்தீஸ்கர் மாநில அரசானது டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன்  ஜூலை 22 அன்று இணைந்து கையெழுத்திட்டுள்ளது.
  • டாடா டெக்னாலஜிஸ் மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் அனைத்தும் சத்தீஸ்கர் மாநிலத்தின் திறமையான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றும் இதன் மூலம் ஆண்டுதோறும் 10,000 இளைஞர்களுக்கு மேம்பட்ட திறன்களைப் பயிற்றுவித்து, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘செமிகான் இந்தியா 2023’ என்ற மாபெரும் நிகழ்ச்சியை குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

  • குஜராத்தின் தலைநகரமான காந்திநகரில் ‘செமிகான் இந்தியா 2023’- என்ற மாபெரும் மாநாட்டு நிகழ்ச்சியை பிரதமர் மோடி ஜூலை 28 2023 அன்று தொடங்கி வைக்கிறார். 
  • இதன் சிறப்பு கண்காட்சியானது அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அவர்களால் ஜூலை 25 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. தேசிய அளவிலான இந்த மாநாட்டு நிகழ்ச்சியில், குறைக்கடத்திகள் தொடர்பான சமீபத்திய அதிநவீன தொழில்நுட்பமானது காட்சிப்படுத்தப்படும் என்றும் பொறியியல் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த கண்காட்சியில் குறைக்கடத்தி உற்பத்தி பற்றி அறிந்து கொள்ளலாம் என்றும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில அரசாங்கமானது தனது புதிய “செமிகண்டக்டர் கொள்கையை(2022-2027)” வெளியிட்டுள்ளது. 

  • குஜராத் மாநில அரசாங்கமானது குறைக்கடத்தி(Semiconductor) கொள்கையை (2022-2027) ஜூலை 23 2023 அன்று வெளியிட்டுள்ளது. உள்நாட்டு குறைக்கடத்தி சிப் உற்பத்தித் துறையில் துரிதப்படுத்தப்பட்ட மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த கொள்கையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த வெளியீட்டின் மூலம் குறைக்கடத்தி(Semiconductor) துறையில் “ஆத்மநிர்பர் இந்தியா” என்ற மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்வதற்காக, குறைக்கடத்தி கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

5ஆவது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய வகை விமான உச்சி மாநாடானது மத்திய பிரதேசத்தில் நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

  • 5ஆவது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய வகை விமான உச்சி மாநாடானது மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ நகரத்தில் ஜூலை 25 2023 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் மாநாட்டை மத்திய பிரதேச அரசாங்கம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) மற்றும் பவன் ஹான்ஸ் லிமிடெட் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. 
  • உடான் திட்டத்தின் முக்கிய நோக்கத்தை மலைப்பாங்கான மற்றும் தொலைதூர நிலப்பரப்புககளுக்கு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு விவாதிப்பதற்காக இந்த மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கடைசி மைலை அடைவது: ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் மூலம் பிராந்திய இணைப்பு” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

அரசியல் செய்திகள்

ஸ்பெயின் நாடாளுமன்ற தேர்தலில் தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழ்நிலை அமைந்துள்ளது.

  • ஸ்பெயினின் பழமைவாத மக்கள் கட்சியானது(PP) ஜூலை 23 அன்று அங்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றியைப் பெற்றாலும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அங்கு தொங்கு பாராளுமன்றம் அமையும்  வாய்ப்பு ஏற்படும் சூழ்நிலை அமைந்துள்ளது.
  • அதாவது இந்த கூட்டணியானது 176 இடங்கள் என்ற முழுமையான பெரும்பான்மைக்கு குறைவாக உள்ளது என்பது இதன் அர்த்தம் ஆகும். 
    • தொங்கு பாராளுமன்றம் –  543 உள்ள மொத்த மக்களவையில் அரசாங்கத்தை அமைக்க ஒரு கூட்டணி அல்லது  கட்சி ஆனது 50% மதிப்பெண்ணுக்கு மேல் ஒரு இடத்தை அல்லது(2/543+1) 272 இடங்களை வெல்ல முடியாத நிலையானது தொங்கு பாராளுமன்றம் அமைய வழிவகுக்கிறது.

நியமனங்கள்

குஜராத் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுனிதா அகர்வால் நியமனம்.

  • குஜராத் உயர்நீதிமன்றத்தின் புதிய மற்றும் 29 ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி சுனிதா அகர்வால் ஜூலை 23 அன்று பொறுப்பேற்றுள்ளார். 
  • இந்த நியமனத்தின் மூலம் இவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி என்ற அந்தஸ்தை பெறுகிறார். இதற்கு முன் நீதிபதி சோனியா பிப்ரவரி 25, 2023 அன்று ஓய்வு பெறும் வரை சில நாட்களுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் அதன் பிறகு நீதிபதி ஏ.ஜே. தேசாய் “தற்காலிக தலைமை நீதிபதியாகவும்” பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி அலோக் பதவியேற்பு.

  • ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் ஜூலை 23 அன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி அலோக் ஆராதே பதவியேற்றுள்ளார்.
  • தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் முன்னிலையில் தற்போதைய புதிய தலைமை நீதிபதிக்கு அம்மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். மேலும் இவர் முன்னதாக, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விருதுகள்

புகழ்பெற்ற நடிகர் டாக்டர் மோகன் ஆகாஷே அவர்களுக்கு 35வது புண்யபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

  • மாபெரும் புகழ்பெற்ற நடிகரும் மனநல மருத்துவருமான டாக்டர் மோகன் ஆகாஷேவுக்கு ஜூலை 23 அன்று மதிப்புமிக்க 35வது புண்யபூஷன் விருதானது பாலகந்தர்வ ரங் மந்திரில் புண்யபூஷன் (டிரைடல் புனே) அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு இவருக்கு 1996 ஆம் ஆண்டு மதிப்புமிக்க மற்றும் உயரிய “சங்கீத நாடக அகாடமி விருதை” வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். புண்யபூஷன் அறக்கட்டளை 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக புனேவின் குடிமக்களுக்கு திறமைகளை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விருதினை வழங்கி வரும் அமைப்பாகும்.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான கொரியா ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாத்விக்-சிராக் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

  • இந்தியாவின் சாத்விக்சாய் மற்றும் சிராக் ஜோடியானது, ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற கொரியா ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளனர்.
  • இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியானது தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசியாவின் முகமது ரியான் மற்றும் ஃபஜர் அல்பியன் ஆகியோரை மூன்று ஆட்டங்களில் வீழ்த்தி, இந்த பட்டததை வென்றுள்ளனர்.

ISSF உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் ட்ராப் அணியானது வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

  • தென் கொரியாவின் சாங்வோனில் நடைபெற்று வரும் ISSF உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஷர்துல் விஹான், பக்தியாருதீன் மாலேக் மற்றும் ஆர்யா வன்ஷ் அடங்கிய இந்திய ஆடவர் ட்ராப் அணியானது தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அத்தொடரில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
  • இந்த வெற்றியின் மூலம் இந்தியா இந்த சாம்பியன்ஷிப் தொடரில் 15வது பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கதாகும். இந்திய அணியானது 346 என்ற மதிப்புடன் இரண்டாவது இடத்தையும் இத்தாலி அணியானது 356 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் பெற்று தங்கத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தம்பேர் ஓபன் 2023 வலைப்பந்து(tennis) சாம்பியன்ஷிப் போட்டியில் சுமித் நாகல் ஏடிபி சேலஞ்சர் பட்டத்தை வென்றுள்ளார்.

  • ஜூலை 23 அன்று பின்லாந்து நாட்டில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான டம்பேர் ஓபன் ஏடிபி சேலஞ்சர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 
  • இது இந்திய டென்னிஸ் வீரரின் நான்காவது ஏடிபி சேலஞ்சர் டூர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 25 வயதான சுமித் நாகல், செக் நாட்டின் டாலிபோர் ஸ்வர்சினா வீரரை 6-4, 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து இந்த ஆண்டின் இரண்டாவது ஏடிபி சேலஞ்சர் போட்டியில் வென்று பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

தேசிய வெப்பப் பொறியாளர் தினம் 2023

  • நாட்டின் அனைத்து வெப்பப் பொறியாளர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் மின்சாரம் சம்பத்தப்பட்ட மிக முக்கியமான அர்ப்பணிப்புகளை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 அன்று “தேசிய வெப்பப் பொறியாளர் தினமானது கொண்டாடப்படுகிறது. 
  •  “Sustainable Innovations for a Greener Tomorrow” என்பது இந்த ஆண்டிற்கான தேசிய வெப்பப் பொறியாளர் தினத்தின் கருப்பொருளாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!