தமிழகத்தில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – இந்தியாவிலேயே முதல்முறையாக பர்னிச்சர் பூங்கா!

0
தமிழகத்தில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - இந்தியாவிலேயே முதல்முறையாக பர்னிச்சர் பூங்கா!
தமிழகத்தில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - இந்தியாவிலேயே முதல்முறையாக பர்னிச்சர் பூங்கா!
தமிழகத்தில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – இந்தியாவிலேயே முதல்முறையாக பர்னிச்சர் பூங்கா!

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பூங்கா திறப்பதற்கு இன்று முதல்வர் அடிகள் நாட்டினர். இந்த பூங்கா மூலம் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு :

தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிய நிலையில் பல திட்டங்களை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக கூட்டுறவு சங்கங்களில் நகைகடன் தள்ளுபடி, ஆவின் பால் விலை குறைப்பு, விரைவில் குடும்ப தலைவிகளுக்கு 1000ரூபாய் வழங்கும் திட்டம் என திட்டங்களை நிறைவேற்றி தற்போதைய அரசு நல்லாட்சி நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் வேலையின்மையை போக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். இந்த வகையில் முத்துக்குளிக்கும் நகரம் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியில் இன்று பல்வேறு பூங்காக்கள், மின் உற்பத்தி மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? புதிய வைரஸ் தொற்று பரவல் எதிரொலி!

இந்த திறப்பு விழாவில் பல்வேறு முதலீட்டார்கள் கலந்து கொண்ட தூத்துக்குடியில் அமைய உள்ள பர்னிச்சர் பூங்கா பற்றி முதல்வர் ஸ்டாலின் விரிவாக பேசினார். இந்த தூத்துக்குடி சிப்காட் பூங்காவில் 1150 ஏக்கர் பரப்பளவில் இந்த பர்னிச்சர் பூங்கா அமைய உள்ளது. மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பர்னிச்சர் ஏற்றுமதி இறக்குமதி, பர்னிச்சர் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்யும் வகையில் சுமார் 100 நிறுவனங்கள் இதில் இடம் பெறுகின்றன.

தமிழக அரசில் Data Entry Operator, அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் போன்ற வளர்ந்த நிறுவனங்கள் மட்டும் இங்கு இடம்பெறவில்லை. பர்னிச்சர் தொழில் சார்ந்த உதிரி பாகங்களை தயார் செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இந்த பூங்காவில் இடம்பெறும். இந்த பர்னிச்சர் தொழில் பூங்கா மூலம் ஆண்டுதோறும் 5000 பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது இங்கேயே தங்கி பர்னிச்சர் துறை தொடர்பான பல்வேறு பயிற்சிகளை இங்கே மேற்கொள்ள முடியும். மேலும் இந்த பூங்கா மூலம் சுமார் ரூ.4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!