BOB வங்கியில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
BOB வங்கியில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
BOB வங்கியில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
BOB வங்கியில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள தலைமை கற்றல் அதிகாரி, துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு:

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தலைமை கற்றல் அதிகாரி, துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களில் உள்ள தகுதியான நபர்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இதில் முதன்மை கற்றல் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க மனித வளத்தில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் அல்லது பிரீமியம் கல்வி நிறுவனங்களில் நடத்தை அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க கணினி அறிவியல் அல்லது தகவல் அமைப்புகள் அல்லது பிற தொடர்புடைய துறைகளில் பொறியியல் பட்டதாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MCA அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்களை நியமிக்க குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல்கள் அல்லது குழு விவாதங்கள் உள்ளிட்ட தேர்வு முறைகளில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் மதிப்பீடு எப்போது? கட் ஆஃப் மார்க் எவ்வளவு?

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் bankofbaroda.in என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் முறையில் வருகிற ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும்.  இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  இதில் SC, ST, PWD, பெண்கள் உள்ளிட்டவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.  மேலும் இப்பணி தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற https://www.bankofbaroda.in என்ற BOBயின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!