TNPSC குரூப் 1 தேர்வு முந்தைய ஆண்டு வினாக்கள் – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள் திருப்புதல் - முக்கிய கேள்விகள்!!
TNPSC குரூப் 1 தேர்வு முந்தைய ஆண்டு வினாக்கள் – தேர்வர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட வினாக்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

வினாத்தாள்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் குரூப் 1 தேர்வு தமிழ்நாட்டின் துணை ஆட்சியாளர், துணை காவல் கண்கணிப்பாளர் பல்வேறு சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு நடத்தப்படுகின்றன. இந்த 90 காலியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு தயாராகி வருபவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க கடந்த ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.1806 வேலூர் கலகமானது 1857 சிப்பாய் கலகத்தின் முன்னோடி நிகழ்வு என்பதை நியாயப்படுத்துக.
Justify that the 1806 Vellore Mutiny was a precursor to 1857 Sepoy Mutiny.

2. 1919ம் ஆண்டுச் சட்டத்தின்படி மாநிலத்தின் இரட்டை ஆட்சி முறையின் செயல்பாட்டினை மதிப்பிடுக. Assess the working of Dyarchy in the provinces according to the Act of 1919.

3. லலித் கலா அகாடமியின் பங்களிப்பைக் குறிப்பிடவும்.
Give an account of the contribution of Lalit Kala Academy.

இந்த பாட நூல்களை படித்தாலே போதும் … TNPSC தேர்வில் நீங்கள் தான் முதலிடம்…!

4. இந்திய சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பில் சர்தார் படேலின் பங்கினை முன்னிலைப்படுத்துக.
Highlight the role of Sardar Patel in the Integration of the Indian States.

5. அயல் நாடுகளின் தாக்கங்கள் எவ்வாறு இந்திய சுதந்திர போராட்டத்தின் தீவிரவாதிகளுக்கு உதவியது? How far the International influences helped for the growth of Extremist nationalism in India?

6. பன்முகத் தன்மைகளுக்கு மத்தியிலும் இந்தியா வலிமையானது / வலுவானது என்று நீங்கள் எந்த வகையில் நினைக்கிறீர்கள்?
In what ways do you think, India is formidable / strong even in the midst of diversities?

7. 19ஆம் நூற்றாண்டின் சமூக-சமய சீர்திருத்த இயக்கங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நெறிமுறையற்ற சமூக நடைமுறைகளை நிவர்த்தி செய்ததா?
Did 19th Century Socio-religious reform movements address unethical social practices against women and children?

8. பண்டைய தமிழ் நாகரீகத்தின் தொன்மையில் கீழடி அகழாய்வு எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
How far the Keeladi excavation has had an impact on the antiquity of ancient Tamil Civilization?

9. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்தின் தொழிலாளி வர்க்கத்தின் பங்களிப்பை மதிப்பிடுக. Evaluate the role of working class of Tamil Nadu in the Quit India Movement.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!