Post Office இல் 8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – சம்பளம், விண்ணப்ப முறை விளக்கம்!

0
Post Office இல் 8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு - சம்பளம், விண்ணப்ப முறை விளக்கம்!
Post Office இல் 8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு - சம்பளம், விண்ணப்ப முறை விளக்கம்!
Post Office இல் 8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – சம்பளம், விண்ணப்ப முறை விளக்கம்!

புதுடெல்லியில் உள்ள அஞ்சல் துறையில் தற்போது காலியாக இருக்கும் 17 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இப்போது இந்த பணிக்கான கல்வித் தகுதி மற்றும் விண்ணப்ப முறைகளை விரிவாக காணலாம்.

வேலை வாய்ப்பு

தேசிய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள அஞ்சல் துறையில் மோட்டார் வாகன எலக்ட்ரீஷியன், மெக்கானிக், ஓவியர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பணியிடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் மூலம் திறமையான கைவினைஞர், பொது மத்திய சேவை கிரேடு C, அரசிதழ் அல்லாத பணியிடங்களில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது வரவேற்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை ‘இது’ கட்டாயம் – அரசு உத்தரவு!

இப்போது இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டிசம்பர் 11க்குள் தங்களது விவரங்களை அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, தேர்வு செயல்முறை, விண்ணப்ப முறை உள்ளிட்ட சில விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்:

மொத்தம் – 17

பணிகள்:

  • மோட்டார் வாகன மெக்கானிக் – 6
  • மோட்டார் வாகன எலக்ட்ரீஷியன் – 2
  • டைர்மேன் – 3
  • ஓவியர் – 2
  • ஃபிட்டர் – 2
  • காப்பர் & டின் ஸ்மித் – 1
  • அப்ஹோல்ஸ்டர் – 1

சம்பளம்:

7வது CPC இன் படி ரூ 19,900 முதல் 63,200 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.

வயது வரம்புகள்:

விண்ணப்பதாரர்கள் 18 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இருப்பினும், ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு தளர்வு இருக்கும்.

தமிழக முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை ‘இது’ கட்டாயம் – அரசு உத்தரவு!

கல்வித் தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர்.11 வரை விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயல்முறை விரிவான அறிவிப்பின் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • திறமையான கைவினைஞர்களைத் தேர்ந்தெடுப்பது.
  • ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் போட்டி வர்த்தகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!