தமிழக முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை ‘இது’ கட்டாயம் – அரசு உத்தரவு!

0
தமிழக முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை 'இது' கட்டாயம் - அரசு உத்தரவு!
தமிழக முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை 'இது' கட்டாயம் - அரசு உத்தரவு!
தமிழக முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை ‘இது’ கட்டாயம் – அரசு உத்தரவு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கையொப்பம்:

தமிழகத்தின் ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக தமிழ் முற்றிலும் பயன்பாட்டு மொழியாக இருக்க செய்திடும் வகையில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் 1956ம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அதனை யாரும் முறையாக கடடைபிடிப்பதில்லை. அதனால் அனைத்து பொதுமக்களுக்கும் பொது பயன்பாடுகளில் இந்த முறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என்று 2021-2022ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையின் போது தொழில் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.

தமிழகத்தில் சிறப்பு முகாம் மூலம் 5,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

இத்தகைய அறிவிப்பு தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குநர் தமிழக அரசுக்கு கடந்த செப்.15ம் தேதி கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் முதன்மை பணியாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டு அது தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை அதாவது பெயர்களை குறிப்பிடும் முன் எழுத்துக்களையும் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

டிச.13 முதல் 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் – மாநில அரசு அறிவிப்பு!

ஆனால் இந்த முறையை அனைவரும் ஆங்கில எழுத்துக்களின் தமிழ் உச்சரிப்பை முன் எழுத்தாக செயல்படுத்தி வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் பெயரின் முன்னெழுத்தை தமிழில் எழுதும் வகையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் தமிழில் கையொப்பம் மற்றும் பெயரின் முன்னெழுத்து எழுத வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களும் தற்போது அதனை பழக்கும் விதமாக சேர்க்கை விண்ணப்பம், மாற்று சான்றிதழ் அனைத்திலும் தமிழில் கையொப்பம் இடுதலை கட்டாயமாக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here