JEE தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்கள் தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ!

0
JEE தேர்வு முடிவுகள் வெளியீடு - மதிப்பெண்கள் தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ!
JEE தேர்வு முடிவுகள் வெளியீடு - மதிப்பெண்கள் தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ!
JEE தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்கள் தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ!

JEE முதன்மைத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியலை NTA இன்று வெளியிட்டுள்ளது. தற்போது எப்படி JEE இரண்டாம் அமர்விற்கான மதிப்பெண் பட்டியலை தெரிந்துகொள்வது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

JEE தேர்வு முடிவு:

நாட்டிலுள்ள 31 தேசிய தொழில்நுட்பக் கழகம், இந்திய பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கழகம், 26 தொழில்நுட்ப நிறுவனங்களின் (IIITs) மற்றும் மத்திய அரசின் இதர தொழில்நுட்பம் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை JEE தேர்வை நடத்துகிறது. இந்த JEE முதன்மை தேர்வின் அடிப்படையில் தான் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், 2022- 23 கல்வியாண்டில் JEE முதன்மைத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதாவது, JEE முதன்மை அமர்வுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – மும்பைக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை!

மேலும், இரண்டாம் அமர்விற்கான JEE தேர்வு ஜூலை 25 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும், இரண்டாம் அமர்விற்கான JEE Main 2022 விடை குறிப்புகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விடைகுறிப்பில் ஏதேனும் பிழைகள் இருந்தால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரைக்கும் திருத்திக்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று JEE முதன்மைத் தேர்வு அமர்வு இரண்டிற்கான மதிப்பெண் பட்டியலை NTA இன்று வெளியிட்டுள்ளது.

அதாவது, JEE முதன்மை தேர்வு முடிவை jeemain.nta.nic.in 2022 மற்றும் ntaresults.nic.in 2022 என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வாளரின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து JEE முதன்மைத் தேர்வின் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,50,000 பேர் JEE மேம்பட்ட தேர்விற்கும் தகுதி பெற்றுள்ளனர். தற்போது எப்படி தேர்வு முடிவை தெரிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், jeemain.nta.nic.in 2022 என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று JEE முதன்மை அமர்வு 2 முடிவு இணைப்பு என்பதை கிளிக் செய்யவும். பின்பு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!