தமிழகத்தில் மே 2ம் தேதி அரசு பொது விடுமுறை – முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்!

0
தமிழகத்தில் மே 2ம் தேதி அரசு பொது விடுமுறை - முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்!
தமிழகத்தில் மே 2ம் தேதி அரசு பொது விடுமுறை - முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்!
தமிழகத்தில் மே 2ம் தேதி அரசு பொது விடுமுறை – முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்!

இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ரமலான் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள் பெருநாள் என்பது பொருளாகும்.தமிழகத்தில் ஈகைப் பெருநாளை முன்னிட்டு மே 2 விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள் வைத்துள்ளார்.

மே 2ம் தேதி பொது விடுமுறை:

ஈதுல் பித்ர் எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருவிழா.உலகம் முழுவதும் புனித ரமலான் மாதம் தொடங்கி, இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் ரம்ஜான் மே 2ம் தேதி அல்லது 3ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. நடப்பு ஆண்டு ரமலான் மாதம் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கியது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் பிறந்ததும் நோன்பு எனும் உண்ணா விரதமிருந்து இறைவனை நினைப்பார்கள், தொழுகை நடத்துவார்கள். ரமலான் நோன்பு என்பது வெறும் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல் நீர் அருந்தாமல், புகைக்காமல், வேறு எந்த ஒரு தீய பழக்கங்களிலும் ஈடுபடாமல் இருப்பதாகும்.

TN Job “FB  Group” Join Now

நோன்பு, முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மிக பயிற்சியாகவும் உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கான 3 கடமையாகும்.வழக்கம்.தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாத்தில் பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகள். ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல் பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும். இந்தியாவில் சிறப்பு தொழுகைகளுடன் ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம் ஆகும்.

1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் கோடை விடுமுறை துவக்கம்!

தமிழகத்தில் ஈகை பெருநாளை (ரம்ஜான்) சிறப்பாக கொண்டாட மே 2 அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் வரும் மே 3-ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.. வரும் ஏப்ரல் 30, மே1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே இடையில் மே 2 திங்கட்கிழமை மட்டும் பணி நாளாக உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை பணி நாளாக அறிவித்தால் ரம்ஜான் பணிடிக்கையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை வசதியாக இருக்கும், ஆதலால் முதல்வர் இதுகுறித்து அரசாணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!