பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியாவா இது? வியப்பில் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!

0
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியாவா இது? வியப்பில் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியாவா இது? வியப்பில் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியாவா இது? வியப்பில் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் குடும்பப் பெண்ணாகவும், அமைதியான பெண்ணாகவும் நகர் வலம் வந்து கொண்டிருக்கும் பாக்கியாவின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ராவின் ரீசென்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாக்கியலக்ஷ்மி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்காதவர்கள் இருக்கவே முடியாது. கோபி ராதிகாவிடமும் பாக்கியாவிடமும் மாட்டியே தீர வேண்டும் என ரசிகர்கள் பல மாதங்களாக காத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. குடிபோதையில் என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் கோபி அனைத்து உண்மையையும் ராதிகாவிடம் கொட்டி தீர்த்துள்ளார். பாக்கியாவின் கணவர்தான் கோபி என்பதை இத்தனை நாட்களாக கோபி தம்மை ஏமாற்றி கொண்டிருந்தார் என்பதை ராதிகா உணர்ந்து கதறி அழுகிறார்.

Exams Daily Mobile App Download

பாக்கியாவிற்காக கோபியை ராதிகா விட்டுக் கொடுப்பாரா அல்லது கோபி பாக்கியாவை விட நம்மை தானே காதலித்து கொண்டு இருக்கிறார் என கோபியை ஏற்றுக்கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராதிகாவிடம் கோபி மாட்டியது போல பாக்கியாவிடமும் கோபி மாட்டிக்கொண்டார். அதாவது குடிபோதையில் ராதிகாவிடம் பேசுவது போல் உங்கள் இருவருக்காக தான் நான் இவ்வளவு விஷயத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். எனது குடும்பத்தையும் உனக்காக விட்டு வரத் தயாராக இருக்கிறேன் எனக் கூறிப் புலம்புகிறார்.

வெண்பாவிற்கு தீவிரமாய் மாப்பிள்ளை பார்க்கும் ஷர்மிளா – நிம்மதியடையும் கண்ணம்மா! ப்ரோமோ ரிலீஸ்!

இதிலிருந்து பாக்கியாவிற்கும் கோபிக்கு கண்டிப்பாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பது தெரிய வருகிறது. ஆனால் கோபிக்கு போதை தெளிந்த பிறகும் கூட இது பற்றி கோபியிடம் பாக்கியா ஒரு வார்த்தைகூட கேட்கவே இல்லை. பாக்கியா செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் ராதிகாவுடன் கோபியை சேர்த்து வைத்துவிடுவார் போல. அந்த அளவுக்கு பாக்கியா நல்லவராக இருந்து வருகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் குடும்பப் பெண்ணாக சுற்றிவரும் பாக்கியா அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் மட்டுமே பாக்கியா பயங்கர குடும்ப பெண்ணாக இருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியே சுசித்ரா மாடர்னாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!