IPL 2024 அப்டேட்: உலக சாதனை படைத்த ஆட்டம்! மாஸ் வெற்றி பெற்ற ஐதரபாத்!

0
IPL 2024 அப்டேட்: உலக சாதனை படைத்த ஆட்டம்! மாஸ் வெற்றி பெற்ற ஐதரபாத்!

ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதியது.

ஐபிஎல் ஆட்டம்

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் 30 வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதின. பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. அதில் முதலில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. இந்த அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. அதில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார்கள். பின் அபிஷேக் ஆட்டமிழக்க , ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். அவர்களே அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

ஜூன்.15 முதல் அமலாகும் புதிய விதிமுறைகள் – இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தகவல்!

அதனை தொடர்ந்து 288 எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 262 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இந்த அணியிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாப் டு பிளெசிசும், விராட் கோலியும் அதிரடியாக விளையாடினர். அதன் பின் 6.2 ஓவரில் 80 ரன்களில் இந்த ஜோடி பிரிந்தது. நம்பிக்கையை இழந்த ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் ஆட்டம் சற்று நம்பிக்கையை கொடுத்தது. அவர் கடைசி வரை போராடி இலக்குக்கு அருகே கொண்டு சென்றார். ஆனால் அவர் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் சேசிங்கில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை பெங்களூரு பெற்றது. இந்த இரு அணிகளும் சேர்ந்து 549 ரன்கள் எடுத்த நிலையில், டி20 போட்டிகளில், அதிக ரன்களை குவித்த போட்டி என்ற உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!