IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – அணி விவரம் & போட்டி அட்டவணை வெளியீடு!

0
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு - அணி விவரம் & போட்டி அட்டவணை வெளியீடு!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு - அணி விவரம் & போட்டி அட்டவணை வெளியீடு!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – அணி விவரம் & போட்டி அட்டவணை வெளியீடு!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில், இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம், போட்டி அட்டவணை குறித்த முக்கியமான சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

போட்டி அட்டவணை

ஐபிஎல் 2022 போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று தொடங்க உள்ளதால் இந்த போட்டிக்கான கவுண்டவுன் ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஐபிஎல் 2022 சீஸனின் தொடக்க ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் 2022 சீசனை பொறுத்தமட்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என்ற இரண்டு புதிய அணிகள் உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. எனவே இந்த முறை மொத்தம் 74 போட்டிகளாக நடத்தப்பட இருக்கிறது.

IPL 2022 திருவிழா: MS தோனி ஒரு சிறந்த ஃபினிஷர்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

இம்முறை கொரோனா பரவல் நெறிமுறைகள் காரணமாக, முழு போட்டியும் மும்பை மற்றும் புனே ஆகிய இரண்டு நகரங்களுக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம், பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் டிஒய் பாட்டீல் ஸ்டேடியம், எம்சிஏ ஸ்டேடியம் ஆகியவை ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானங்கள் ஆகும். தவிர ஐபிஎல் 2022 இன் பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடங்கள் இன்னும் கிரிக்கெட் வாரியத்தால் முடிவு செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டுகளை போலவே இம்முறையும் MS தோனியின் தலைமையில் களமிறங்க இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஐந்தாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் சூரத்தில் பயிற்சி முகாமை நடத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் CSK அணி சில புதிய முகங்களுடன் ஒரு வலிமையான சக்தியாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்போது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மார்ச் 26 அன்று வான்கடே ஸ்டேடியத்தில் வைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர் கொள்கிறது.

வீரர்களின் விபரம்:

எம்எஸ் தோனி (C), ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், டிவோன் கான்டோரஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, சுப்ரான்சு சேனாபதி, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், கே பகத் வர்மா

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முழு போட்டி அட்டவணை & தேதி உள்ளிட்ட விவரங்கள்!

போட்டி அட்டவணை:

  • மார்ச் 26: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இரவு 7.30 வான்கடே மைதானம்
  • மார்ச் 31: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – இரவு 7.30 பிரபோர்ன் – சிசிஐ
  • ஏப்ரல் 3: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – இரவு 7.30 பிரபோர்ன் – CCI
    ஏப்ரல் 9: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மாலை 3.30 DY பாட்டீல் ஸ்டேடியம்
  • ஏப்ரல் 12: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 7.30 PM DY பாட்டீல் ஸ்டேடியம்
  • ஏப்ரல் 17: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 7.30 PM MCA ஸ்டேடியம் – புனே
  • ஏப்ரல் 21: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 7.30 PM DY பாட்டீல் ஸ்டேடியம்
  • ஏப்ரல் 25: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 7.30 PM வான்கடே மைதானம்
  • மே 1: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 7.30 MCA ஸ்டேடியம் – புனே
  • மே 4: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – இரவு 7.30 எம்சிஏ ஸ்டேடியம் – புனே
  • மே 8: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – இரவு 7.30 டிஒய் பாட்டீல் ஸ்டேடியம்
  • மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – 7.30 PM வான்கடே மைதானம்
  • மே 15: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – 3.30 PM வான்கடே மைதானம்
  • மே 20: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் இரவு – 7.30 பிரபோர்ன் – சிசிஐ

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!