IPL 2022: ஏலத்தில் தனக்கான பட்ஜெட் குறித்து பேசிய இந்திய வீரர்கள் – வைரலாகும் வீடியோ பதிவு!

0
IPL 2022: ஏலத்தில் தனக்கான பட்ஜெட் குறித்து பேசிய இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ பதிவு!
IPL 2022: ஏலத்தில் தனக்கான பட்ஜெட் குறித்து பேசிய இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ பதிவு!
IPL 2022: ஏலத்தில் தனக்கான பட்ஜெட் குறித்து பேசிய இந்திய வீரர்கள் – வைரலாகும் வீடியோ பதிவு!

2022 IPL வீரர்களுக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் அணியில் தக்க வைக்கப்படாத CSK வீரர் கேட்ட கேள்விகளுக்கு 2 இந்திய வீரர்கள் பதிலளித்த வேடிக்கையான வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ பதிவு:

இந்த ஆண்டு முதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் வரை ஐபிஎல்லில் பங்கேற்கவுள்ளன. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக 15 வது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே போல் தக்கவைத்த வீரர்கள் பட்டியலை 10 அணிகளும் சமீபத்தில் வெளியிட்டது.

மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு ரத்து – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

பத்து அணிகள் அடுத்த மாதம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், மீதமுள்ள வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே போல கடந்த சில மாதங்களில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், அதில் சில முக்கிய வீரர்களை அணியில் சேர்க்க, நிச்சயம் அனைத்து அணிகளும் குறி வைக்கும் என்பதால் இரண்டு நாட்களும் ஐபிஎல் ஏலம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ரூ.2 லட்சம் அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை? முழு விபரம் இதோ!

இந்நிலையில், ஐபிஎல் ஏலம் குறித்து இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூர், கே எல் ராகுல் மற்றும் சாஹல் ஆகியோர் பேசும் வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவினுள் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ராகுலிடம் ஷர்துல் தாக்கூர், ‘என்னை உங்களின் அணியில் எடுக்க பட்ஜெட் ஏதேனும் போட்டு வைத்திருக்கிறீர்களா?” என கேட்கிறார். இதற்கு வேடிக்கையாக பதிலளித்த ராகுல், ‘உங்களுடைய அடிப்படை தொகையில் வேண்டுமானால் எடுத்துக் கொள்வோம்’ என தெரிவித்தார். ராகுலின் பதிலுக்கு மறுகணமே பதிலடி கொடுத்த சாஹல் ‘கடவுளுக்கு எல்லாம் என்ன பட்ஜெட்’ என்று கூறினார். தற்போது மூவரும் பேசிய இந்த வீடியோ பதிவை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!