IPL 2021 அப்டேட்ஸ் : பயிற்சியின் போது மாஸ் கட்டிய சின்ன தல! குஷியில் ரசிகர்கள்!

0
IPL 2021 அப்டேட்ஸ் பயிற்சியின் போது மாஸ் கட்டிய சின்ன தல! குஷியில் ரசிகர்கள்!
IPL 2021 அப்டேட்ஸ் பயிற்சியின் போது மாஸ் கட்டிய சின்ன தல! குஷியில் ரசிகர்கள்!

IPL 2021 அப்டேட்ஸ் : பயிற்சியின் போது மாஸ் கட்டிய சின்ன தல! குஷியில் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் வலைப்பயிற்சியில் சின்ன தல சுரேஷ் ரெய்னா அதிக தூரத்திற்கு சிக்ஸர் அடித்துள்ளார். ரசிகர்கள் இதனால் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

IPL 2021 அப்டேட்ஸ்:

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் ஆகும். கொரோனா தொற்று பரவியதால் கடந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டாலும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற நேரத்தில் வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய பவுலர்கள் அசத்தல்! இங்கிலாந்து அணி தடுமாற்றம்!

அதன் பின்னர் இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. வரும் செப்.19 தேதி முதல் மீண்டும் இப்போட்டிகள் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

Manchester United நம்பர் 7 ஜெர்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இதனால் அனைத்து அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சென்னை அணியின் துணை கேப்டனும், சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா வலைப்பயிற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது பயிற்சியின் போது அதிக தூரத்திற்கு சிக்ஸர் ஒன்றை அடித்துள்ளார். இதனால் போட்டியின் போது அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!