IND vs ENG 4வது டெஸ்ட் – ஒல்லி போப் அரைசதம்! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

0
IND vs ENG 4வது டெஸ்ட் – ஒல்லி
IND vs ENG 4வது டெஸ்ட் – ஒல்லி போப் அரைசதம்! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய பவுலர்களின் கிடுக்குபிடியால் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.

IND vs ENG 4வது டெஸ்ட்:

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் தொடங்கியது. 1-1 என தொடர் சமநிலையில் உள்ளதால் இதில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.

Manchester United நம்பர் 7 ஜெர்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தொடக்க ஆட்டகாரரர்கள் ரோஹித் 11 ரன்கள் மற்றும் ராகுல் 17 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்த வந்த புஜாராவும் (4 ரன்கள்) நிலைக்கவில்லை. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோஹ்லி அரைசதம் (50 ரன்கள்) கடந்து ஆட்டமிழந்தார். ஜடேஜா (10), ரஹானே (14), பண்ட் (9) என அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய தாக்குர் 57 ரன்கள் (36 பந்துகள், 7 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். மற்ற வீரர்கள் சொதப்ப இந்திய அணி 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

IPL போட்டிகளுக்கு இடையே 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.18 லட்சம் – ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு!

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளும் அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியை இந்திய பவுலர்கள் வேகத்தில் மிரட்டினர். தொடக்க அட்டகாரரர்கள் ரோரி பர்ன்ஸ் (5), ஹசீப் ஹமீத் (0) இருவரையும் பும்ராஹ் காலி செய்தார். கேப்டன் ஜோ ரூட் (21) உமேஷ் யாதவ் வேகத்தில் வீழ்ந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து இருந்தது.

இரண்டாம் நாள் மேட்ச் அப்டேட்ஸ்:
  • 23 ஓவர்களின் முடிவில் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது. போட்டி துவங்கியதுமே கிரேக் ஓவர்டன் 1 ரன் (12 பந்துகள்) உமேஷ் யாதவ் வேகத்தில் வீழ்ந்தார். இந்திய வேக தாக்குதலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.
  • 24.4 ஓவர்களின் பொது உமேஷ் வேகத்தில் டேவிட் மலான் 31 ரன்களில் (67 பந்துகள், 5 பவுண்டரி) ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 24.5 ஓவர்களின் முடிவில் 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் பின்தங்கியுள்ளது.
  • மத்திய உணவு இடைவேளையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஒல்லி போப் ஆகியோர் இணைந்து அணையை சரிவில் இருந்து மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். இங்கிலாந்து அணி 42 ஓவர்களின் முடிவில் 139-5 என்ற நிலையை எட்டியுள்ளது. களத்தில் ஒல்லி போப் 38 ரன்களுடனும் (66 பந்துகள், 5 பவுண்டரி) ஜானி பேர்ஸ்டோ 34 ரன்களுடனும் (63 பந்துகள், 7 பவுண்டரி) உள்ளனர். இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வருகின்றனர்.
  • இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ சிராஜ் பந்து வீச்சில் 37 ரன்களுக்கு (77 பந்துகள், 7 பவுண்டரி) எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 48.5 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் பின்தங்கியுள்ளது.
  • ஒல்லி போப் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார். 57.1 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து 6 ரன்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் ஒல்லி போப் 61 ரன்களுடனும் (110 பந்துகள், 6 பவுண்டரி) மொயின் அலி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!