லோக்சபா தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதி – தேர்தல் அலுவலர் அறிவிப்பு!

0
லோக்சபா தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதி - தேர்தல் அலுவலர் அறிவிப்பு!

நாளை தமிழகத்தில் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதியை மாவட்ட தேர்தல் அலுவலர் தற்போது வெளியிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி:

தமிழகம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நாளை (ஏப்ரல் 19) முதல் கட்ட லோக்சபா தேர்தலானது நடைபெறவுள்ளது. எனவே தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது, இத்தேர்தலுக்கான பயிற்சிகளும் களப்பணியாளர்களுக்கு இன்றுடன் முடிக்கப்பட்டது. மேலும் இத்தேர்தலில் முழு வாக்கை பதிவு செய்ய தேர்தல் கமிஷனும் பல்வேறு வசதிகளை வாக்காளர்களுக்கு செய்து கொடுத்துள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு கிட்ட நெருங்கியாச்சு தேர்வர்களே – முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் முழு ஓட்டை பதிவு செய்யவும், அவர்களுக்கு வாக்களிக்க உதவவும் மாவட்ட தேர்தல் அலுவலர் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது மாற்றுத்திறனாளி வாக்காளர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், எங்களுக்கு அழைத்தால் அவர்கள் வந்து செல்ல வாகன ஏற்பாடு செய்து தரப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்த உதவியை பெற்ற Saksham செயலி அல்லது 1950 என்ற எண்ணின் மூலம் மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!