ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘செம்பருத்தி’ நடிகை ஷபானா ஷாஜகான் – நெகிழ்ச்சி பதிவு!

0
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த 'செம்பருத்தி' நடிகை ஷபானா ஷாஜகான் - நெகிழ்ச்சி பதிவு!
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த 'செம்பருத்தி' நடிகை ஷபானா ஷாஜகான் - நெகிழ்ச்சி பதிவு!
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘செம்பருத்தி’ நடிகை ஷபானா ஷாஜகான் – நெகிழ்ச்சி பதிவு!

தமிழ் சின்னத்திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான், தனது பிறந்தநாளை சிறப்பாக மாற்றியதற்காக ரசிகர்களுக்கு நன்றி கூறி ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஷபானா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரை உலகுக்கு அறிமுகமானவர், பிரபல மலையாள நடிகை ஷபானா ஷாஜகான். இந்த சீரியலில் துறுதுறு இளம் பெண்ணாக நடித்து வந்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏக ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் சுமார் 1150 எபிசோடுகளை கடந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த 3 வருட காலத்தில் நடிகை ஷபானா சிறந்த நடிகைக்கான 6 முக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

அனுவிற்கு DNA டெஸ்ட் எடுக்க சொல்லும் பிச்சைக்கார ஜோடி – ‘ரோஜா’ சீரியல் ப்ரோமோ!

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்து வரும் நடிகை ஷபானா, இன்ஸ்டாகிராமில் தனது 6 லட்சம் பாலோயார்களுக்காக புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது விஜய் டிவியின் பிரபல ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நடிகர் ஆர்யனை இவர் காதலித்து வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஷபானா கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று தனது 24 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதையடுத்து, தனது பிறந்தநாள் அன்று ரசிகர்கள் தனக்காக செய்த சில செயல்பாடுகளுக்காக நன்றி கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் ஷபானா. அந்த பதிவில், ‘ஆகஸ்ட் 29 அன்று எனது சிறந்த பிறந்தநாளை கொண்டாடிய பிறகு இதை எழுதுகிறேன். எனது பிறந்தநாளுக்காக அன்பான ரசிகர் குடும்பத்தினர் எடுத்த முயற்சி, எடிட் புகைப்படங்கள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். ரசிகர்களாகிய நீங்கள் தான் எனது பலம்.

கலர்ஸ் தமிழ் சேனல் அம்மன் சீரியலில் களமிறங்கும் Mr.சென்னை பிரபலம் – அவரே வெளியிட்ட பதிவு!

நான் எனது நடிப்பின் மூலம் இன்னும் உங்களை மகிழ்வித்து கொண்டே இருப்பேன். எனக்கு வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்கள், குடும்ப உறவுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய நிபந்தனையற்ற அன்பு எனது பிறந்தநாளை இன்னும் அழகாக்கியது. உங்களது அன்பால் நான் உலகின் உயரத்தில் இருப்பது போல உணர்ந்ததற்காக நன்றி கூறுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு நடிகை ஷபானா ரசிகர்களை கவர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!