துபாய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி எண்கள் – இந்திய அரசு அறிவிப்பு!

0
துபாய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி எண்கள் - இந்திய அரசு அறிவிப்பு!

பெரிய பொருளாதார நாடான துபாயில் ஒரே நாளில் ஒரு வார மழை பெய்து இருப்பதால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

துபாய் மழை

ஐக்கிய அமீரகத்தில் கடுமையான கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளக்காடாய் மாறி இருக்கிறது. வெள்ளத்தால் பல சேதாரங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பலர் உடமைகளை இழந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்றால் கடந்த 14ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் 6 முதல் 7 மேக விதைப்பு விமானங்கள் பறந்தது. அதனால் ஏற்பட்ட அதிகப்படியான மேக விதைப்பால் தான் பயங்கர மழை பெய்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு கிட்ட நெருங்கியாச்சு தேர்வர்களே – முக்கிய அறிவிப்பு!

மேலும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள், 971501205172, 971569950590, 971507347676, 971585754213 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சமூக அமைப்புகளுடன் இணைந்து நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!