IPL 2021 – தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி, DC vs SRH போட்டி நடைபெறுமா? 

0
IPL 2021 - தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி, DC vs SRH போட்டி நடைபெறுமா
IPL 2021 - தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி, DC vs SRH போட்டி நடைபெறுமா

IPL 2021 – தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி, DC vs SRH போட்டி நடைபெறுமா? 

ஐதராபாத் அணியை சேர்ந்த தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஐதராபாத் – டெல்லி போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி:

வருடந்தோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. ரசிகர்கள் இன்றியும் இந்த போட்டிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது.

IPL 2021 : DC vs SRH இன்று பலப்பரீட்சை – பிட்ச் ரிப்போர்ட், அதிக ரன்கள் & உத்தேச 11 அணி!

ஆனால் எதிர்பார்க்கப்பட்டதை போன்றே வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அநேகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. அதற்கு முன் வீரர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

IPL 2021, PBKS vs RR LIVE Updates:இறுதி நேர பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!

இதில் ஐதராபாத் அணி வீரர் யார்க்கர் நடராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தடைபடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. நடராஜனோடு சேர்த்து அவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் ஜே (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வண்ணன் (மருத்துவர்), துஷார் கேட்கர் (தளவாட மேலாளர்) மற்றும் பெரியசாமி கணேசன் (நெட் பவுலர்) ஆகிய 6 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

IPL திருவிழா 2021: புள்ளி பட்டியலில் யாரு டாப்? ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப்!

ஆனால் ஐதராபாத் அணியை சேர்ந்த மற்ற வீரர்களுக்கு சோதனை முடிவுகள் நெகடிவ் ஆக வந்ததால் இன்றைய டெல்லி எதிரான போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சூழ்நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டாலும் மீண்டும் தொற்று ஏற்படுவது ரசிகர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!