IPL திருவிழா 2021: புள்ளி பட்டியலில் யாரு டாப்? ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப்!

0
IPL திருவிழா 2021 புள்ளி பட்டியலில் யாரு டாப் ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப்!
IPL திருவிழா 2021 புள்ளி பட்டியலில் யாரு டாப் ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப்!

IPL திருவிழா 2021: புள்ளி பட்டியலில் யாரு டாப்? ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப்!

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் அணிகளுடைய புள்ளிகளின் அடிப்படையில் புள்ளி பட்டியலினை IPL வாரியம் வெளியிட்டு உள்ளது.

ஐபிஎல் புள்ளி பட்டியல் :

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இப்போட்டிகள் கடந்த 2020ம் ஆண்டினை போல ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த ஆண்டு கூடுதலாக ரசிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல்லின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இன்னும் லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

INDW vs AUSW 1st ODI – 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

அதில் 6 வெற்றிகளின் மூலம் 12 புள்ளிகள் மற்றும் +1.223 ரன் ரேட் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி (12 புள்ளி) அணியும், மூன்றாவது இடத்தில் பெங்களூர் (10 புள்ளி) அணியும் உள்ளன. இந்த 2 நாட்களில் இது வரை சென்னை, மும்பை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய 4 அணிகள் மட்டுமே களமிறங்கியுள்ளன. மீதமுள்ள போட்டிகள் நடைபெற இதில் கட்டாயம் மாற்றம் நிகழும்.

ஐபிஎல் புள்ளி பட்டியல் 2021:

No.

Teams Played Won Lost N/R Points NRR

1

Chennai Super Kings

8 6 2 0 12 1.223
2 Delhi Capitals 8 6 2 0 12

0.547

3 Royal Challengers Bangalore 7 5 2 0 10

-0.171

4

Mumbai Indians 8 4 4 0 8 -0.071
5 Kolkata Knight Riders 8 3 5 0 6

0.11

6

Rajasthan Royals 7 3 4 0 6 -0.19
7 Punjab Kings  8 3 5 0 6

-0.368

8

Sunrisers Hyderabad 7 1 6 0 2

-0.623

ஆரஞ்சு கேப் :

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கே ஆரஞ்சு கேப் வழங்கப்படும். தற்போது இந்த கேப் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் வசம் உள்ளது. 8 போட்டிகளில் மொத்தமாக 380 ரன்கள் குவித்து உள்ளார். இன்னும் இந்த இரண்டாம் கட்ட ஆட்டங்களில் டெல்லி அணி களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் கே எல் ராகுல் (331 ரன்கள்), டு பிளசி (320 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.

IPL 2021 : PBKS vs RR இன்று மோதல் – வெற்றி வாய்ப்பு யாருக்கு? பிட்ச் ரிப்போர்ட், 11 அணி!

பர்பிள் கேப் :

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களுக்கு பர்பிள் கேப் கொடுக்கப்படும். தற்போது இந்த கேப்பினை பெங்களூர் வீரர் ஹர்ஷல் படேலிடம் உள்ளது. மொத்தமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடங்களில் அவேஷ் கான் (14 விக்கெட்டுகள்), கிறிஸ் மோரிஸ் (14 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர். நேற்றைய (செப்.20) கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதே போல் இன்று (செப் 21) நாட்ட இருக்கும் ராஜஸ்தான்- பஞ்சாப் ஆட்டத்தில் கிறிஸ் மோரிஸ் ஜொலிக்கும் பட்சத்தில் பர்பிள் கேப்பினை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!