IPL 2021 : PBKS vs RR இன்று மோதல் – வெற்றி வாய்ப்பு யாருக்கு? பிட்ச் ரிப்போர்ட், 11 அணி!

0
IPL 2021 PBKS vs RR இன்று மோதல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு பிட்ச் ரிப்போர்ட், 11 அணி!
IPL 2021 PBKS vs RR இன்று மோதல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு பிட்ச் ரிப்போர்ட், 11 அணி!

IPL 2021 : PBKS vs RR இன்று மோதல் – வெற்றி வாய்ப்பு யாருக்கு? பிட்ச் ரிப்போர்ட், 11 அணி!

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. அவற்றின் நிலை, பிட்ச் ரிப்போர்ட், உத்தேச அணி விவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.

Punjab Kings vs Rajasthan Royals:

ஐபிஎல்லில் இன்று 32வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அனுபவமில்லாத ராஜஸ்தான் அணி, தடுமாறும் பஞ்சாப் அணி என இரு அணிகளும் நிலையற்ற ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகள் – BCCI அட்டவணை வெளியீடு!

சீசன் துவக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணி வெற்றி, தோல்வி என மாறி மாறி நிலையில்லாமல் தடுமாறி வருகிறது. பேட்டிங்கில் பெரிய ஸ்கோரினை அடித்து வலுவான அஸ்திரம் அமைத்தாலும், பந்து வீச்சில் மிகவும் சோகமாக நிலையிலேயே உள்ளது. மூத்த பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி உட்பட அனைவரும் ரன்களை வாரி வழங்குகின்றனர். பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் ராகுல், மயங்க் அகர்வால், யுனிவெர்சல் பாஸ் கெயில், பூரன், மந்தீப் சிங், தீபக் ஹூடா என பெரிய பட்டாளமே உள்ளது. இவர்கள் நிலைத்து விட்டால் எதிரணியை சிதறடித்து விடுவர்.

பவுலிங்கில் ஷமி, முருகன் அஷ்வின் / ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் போன்றோர் விக்கெட் வேட்டை நடத்தினால் நல்லது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அனுபவமான நட்சத்திர வீரர்களான ஜோஸ் பட்லர், ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் போட்டியில் இருந்து விலகியுள்ளதால் அந்த அணி சிக்கலில் உள்ளது. தற்போது ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, சிவம் துபே, டேவிட் மில்லர், மனன் வோரா ஆகியோரை தான் மலை போல் நம்ப வேண்டியுள்ளது.

உலகின் நம்பர் 1 T 20 பவுலர் தப்ரைஸ் ஷம்ஸி ராஜஸ்தான் அணிக்கு அனுகூலமாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும். இந்த சீசனின் முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 222 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி அருகில் நெருங்கி (217 ரன்கள்) தோல்வியை தழுவியது. இதனால் இந்த ஆட்டத்தில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

IPL 2021, KKR vs RCB LIVE Updates: கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

பிட்ச் ரிப்போர்ட்:

இந்த போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. துபாய் மைதானம் முதலில் பேட்டிங்கிற்கும் பிறகு பந்து வீச்சிற்கும் ஒத்துழைக்கும் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இதுவரை இவ்விரு அணிகள் நேருக்கு நேர் 22 முறை மோதியுள்ளன. அதில் பஞ்சாப் 10 முறையும், ராஜஸ்தான் 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் சரிசம வாய்ப்பு உள்ளது. வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அணி வீரர்கள் (உத்தேச விவரம்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – யஷஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன் (சி மற்றும் டபிள்யூ.கே), ரியான் பராக், சிவம் துபே, டேவிட் மில்லர் /மனன் வோஹ்ரா, கிறிஸ் மோரிஸ், ராகுல் தேவாடியா, சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனத்கட் / முஸ்தாபிசூர் ரஹ்மான், தப்ரைஸ் ஷம்ஸி
  • பஞ்சாப் கிங்ஸ் – லோகேஷ் ராகுல் (சி மற்றும் வாரம்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, மொயிஸ் ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், அடில் ரஷித், முகமது ஷமி, முருகன் அஷ்வின் / ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!