INDW vs AUSW 1st ODI – 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

0
INDW vs AUSW 1st ODI - 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
INDW vs AUSW 1st ODI - 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

INDW vs AUSW 1st ODI – 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி:

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. அதன் முதலாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. கேப்டன் மிதாலியை தவிர அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினர். அதிகபட்சமாக மிதாலி ராஜ் 61 ரன்கள், யஸ்திகா பாடியா 35 ரன்கள் மற்றும் ரிச்சா கோஷ் 32 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது.

IPL 2021 : PBKS vs RR இன்று மோதல் – வெற்றி வாய்ப்பு யாருக்கு? பிட்ச் ரிப்போர்ட், 11 அணி!

ஆஸ்திரேலியா தரப்பில் டார்சி பிரவுன் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். மோலினக்ஸ், HJ டார்லிங்டன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 229 ரன்களை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரேச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலி ஆகியரோ வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். செண்டியுரி பார்ட்னெர்ஷிப் அமைத்த இந்த கூட்டணி 126 ரன்களில் பிரிந்தது. அலிசா ஹீலி 77 ரன்கள் (77 பந்துகள், 8 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்த போது பூனம் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகள் – BCCI அட்டவணை வெளியீடு!

அடுத்து களமிறங்கிய கேப்டன் மெக் லேனிங், ரேச்சல் ஹெய்ன்ஸ் உடன் இணைத்து வெற்றியை உறுதி செய்தார். முடிவில் ஆஸ்திரேலியா அணி 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. களத்தில் ரேச்சல் ஹெய்ன்ஸ் 93 ரன்கள் (100 பந்துகள், 7 பவுண்டரி) மற்றும் மெக் லேனிங் 53 ரன்கள் (69 பந்துகள், 7 பவுண்டரி) உள்ளனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி செப் 24ம் தேதி ஹரூப் பார்க், மேக்கேவில் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!