UAN, PPO எண்ணை பதிவிறக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம் – EPFO உறுப்பினர்களுக்கான அறிவிப்பு!

0
UAN, PPO எண்ணை பதிவிறக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம் - EPFO உறுப்பினர்களுக்கான அறிவிப்பு!
UAN, PPO எண்ணை பதிவிறக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம் - EPFO உறுப்பினர்களுக்கான அறிவிப்பு!
UAN, PPO எண்ணை பதிவிறக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம் – EPFO உறுப்பினர்களுக்கான அறிவிப்பு!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள் UAN, PPO எண் மற்றும் திட்டச் சான்றிதழை டிஜிலாக்கர் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

EPFO பயனர்கள்:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களுக்கான முக்கிய சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, EPFO உறுப்பினர்களின் வசதிக்காக டிஜிலாக்கர் என்னும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டிஜிலாக்கர் மூலமாக உறுப்பினர்கள் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, EPFO உறுப்பினர்கள் டிஜிலாக்கர் மூலமாக UAN கார்டு, பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (பிபிஓ) சான்றிதழ் மற்றும் திட்டச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்பல் – வலுக்கும் கோரிக்கை!

அதாவது, இது குறித்தான விவரங்கள் அனைத்தையும் EPFO கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆவணங்களையும் டிஜிலாக்கர் மூலமாக எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்தான அறிவிப்பையும் EPFO வெளியிட்டிருந்தது. UAN எனப்படும் 12 இலக்க எண் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளை கண்காணிக்க மிக அவசியமான ஒன்றாக விளங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

அதே போல PPO எண் எனப்படும் 12 இலக்க எண் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியத்தை பெறுவதற்கு மிகவும் அவசியமானது. இந்த இரண்டு விவரங்களையும் உறுப்பினர்கள் டிஜிலாக்கரில் இருந்து பெற்று கொள்ளலாம். அதே போல வருங்கால வைப்பு நிதி உறுப்பினரின் சேவை வரலாறு பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஈபிஎஸ் சான்றிதழையும் டிஜிலாக்கரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் ஊழியர் பணியாற்றிய ஆண்டுகளின் எண்ணிக்கை, குடும்பத் தகவல்கள் மற்றும் உறுப்பினர் இறந்துவிட்டால் யார் அந்த ஓய்வூதிய பணத்தை பெற தகுதியானவர்கள் என அனைத்து விவரங்களையும் இந்த டிஜிலாக்கர் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!