ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புகைப்படத்தினை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - புகைப்படத்தினை மாற்றுவதற்கான வழிமுறைகள்!
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - புகைப்படத்தினை மாற்றுவதற்கான வழிமுறைகள்!
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புகைப்படத்தினை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

ஆதார் கார்டில் தங்கள் புகைப்படத்தை தேவைக்கேற்ப மாற்றி கொள்ளும் வசதியை UIDAI அமைப்பு வழங்குகிறது. அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிவில் எவ்வாறு ஆதாரில் புகைப்படம் மாற்றுவது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

புகைப்படம் மாற்றுதல்:

இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக விளங்குகிறது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் ஆதார் எண் கேட்கிறார்கள். ஆதார் எண் அனைத்து வேலைகளுக்கும் அவசியமாக உள்ளதால் இந்த ஆதார் எண்ணை நாம் வங்கி மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அந்த வகையில் ஆதாரில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது ஆன்லைன் வாயிலாக ஆதார் புகைப்படம் மாற்றுதல் கைரேகை பதிவு போன்றவைகளை நாம் ஆதார் மையத்தில் தான் மாற்ற முடியும். ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, அருகிலுள்ள ஆதார் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது சான்றாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கலாம். அடுத்தாக ஆதார் மையத்தில் உங்களது புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும்.

PM Kisan திட்ட பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதை’ செய்யாவிட்டால் பணம் வராது!

மேற்சொன்னவற்றை சமர்ப்பித்த பிறகு உங்களின் புகைப்படம் மாற்றுவது தொடர்பான கோரிக்கை எண்ணுடன் (URN) ஒப்புகை சீட்டு உங்களுக்கு ஆதார் மையத்தில் வழங்கப்படும். இதற்கு கட்டணமாக ரூ. 25 செலுத்த வேண்டும். அதன் பிறகு விவரம் ஆதார் மைய அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு நேரடியாக கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்படும். பின் 2 வாரங்களில் நீங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்த முகவரிக்கு, புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை உங்கள் வீட்டு முகவரிக்கு வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!