கலக்கலாக வந்த புத்தம் புது Instagram அப்டேட் – இனி வீடியோவில் தூள் கிளப்பலாம்!

0
கலக்கலாக வந்த புத்தம் புது Instagram அப்டேட் - இனி வீடியோவில் தூள் கிளப்பலாம்!
கலக்கலாக வந்த புத்தம் புது Instagram அப்டேட் - இனி வீடியோவில் தூள் கிளப்பலாம்!

இன்ஸ்டாகிராம், பயனர்களுக்கு நீண்ட தடையில்லாத ஸ்டோரீஸை பதிவேற்றுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. இந்த புதிய அம்சம் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இன்ஸ்டா ஸ்டோரீஸ்:

தற்போது உலகம் முழுவதும் இணையத்தின் பயன்பாட்டிற்கும், நவீன செயலிகளின் பயன்பாட்டிற்கும் மக்கள் அடிமையாகி விட்டனர். பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் ஆரம்பத்தில் இருந்து வந்த பல செயலிகளும் தற்போது வாழ்க்கையின் அங்கமாக மாறும் அளவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் செயலிகளின் நிறுவனமும் புது புது அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது.

தற்போது அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அப்டேட் வர உள்ளது. அதன்படி, இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு நீண்ட தடையில்லாத ஸ்டோரீசை பதிவேற்ற முடியும். முன்னதாக, 60 வினாடிகளுக்குக் குறைவான ஸ்டோரீஸ் பதிவிடும் போது அவை பகுதிகளாக பிரிக்கப்படும். இனி அவ்வாறு இல்லாமல் முழு வீடியோவும் அப்படியே பதிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5G இணைய சேவையில் இப்படி ஒரு பிளான் இருக்கா – இரண்டே ஆண்டுகளில் மாறப்போகும் இந்தியா!

மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டெக் க்ரஞ்ச் இது குறித்து, ஸ்டோரீஸ் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில் நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம். இப்போது, தானாக 15 வினாடி கிளிப்களாக பிரிக்கப்படுவதற்கு பதிலாக, 60 வினாடிகள் வரை தொடர்ந்து ஸ்டோரீசை உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த அப்டேட்டால் இன்ஸ்டா பயனர்கள் குஷியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!