இந்திய மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அடுத்த வாரம் கலந்தாய்வு!!

0
இந்திய மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - அடுத்த வாரம் கலந்தாய்வு!!
இந்திய மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - அடுத்த வாரம் கலந்தாய்வு!!
இந்திய மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அடுத்த வாரம் கலந்தாய்வு!!

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் முதல் நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை:

இந்திய மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழகத்தில் உள்ள 5 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் உள்ள 330 இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள 50 இடங்கள் மற்றும் மாநில அரசுக்கு 280 இடங்கள் உள்ளன. அதேபோல் தமிழகத்தில் உள்ள 24 தனியார் கல்லூரிகளில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 65% இடங்கள் மாநில அரசுக்கும், 35% இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் உள்ளன.

தமிழக அரசு வழங்கும் 69% இடஒதுக்கீடு குறித்த வழக்கு – 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!!

இதில் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களில் 3492 பேர் அரசு ஒதுக்கீட்டிலும், 1346 பேர் நிர்வாக ஒதுக்கீட்டிலும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தற்போது மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வனக்காப்பாளர் பணிகளுக்கான காலியிடங்கள் – 230 பேர் தகுதியின்றி நிராகரிப்பு!!!

அதில் அரசு ஒதுக்கீட்டில் 3310 மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 1301 பேரும் உள்ளனர். மேலும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீட்டில் 119 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!