தமிழக வனக்காப்பாளர் பணிகளுக்கான காலியிடங்கள் – 230 பேர் தகுதியின்றி நிராகரிப்பு!!!
தமிழகத்தில் உள்ள வனகாப்பாளர் பணிக்கான காலி இடங்களை நிரப்ப 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு பின் கொரோனா காரணமாக ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில் தற்போது 230 பேர் தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனக்காப்பாளர் பணி:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 230 வனக்காப்பாளர் பணிக்கான அறிவிப்பு கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்டது. தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தேர்வு மே மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தற்போது அந்த தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் திறன் தேர்வு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் சான்றிதழ் சரியாக இல்லாத காரணத்தால் 107 பேர் மற்றும் உடல் திறன் தேர்வில் 123 பேர் என 230 பேர் தகுதி இல்லாதவர்களாக தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் பதிவெண்கள் வனத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்