தென் ஆப்பிரிக்க மண்ணில் வரலாறு படைக்குமா இந்திய அணி? டிச.26 முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்!

0
தென் ஆப்பிரிக்க மண்ணில் வரலாறு படைக்குமா இந்திய அணி? டிச.26 முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் வரலாறு படைக்குமா இந்திய அணி? டிச.26 முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் வரலாறு படைக்குமா இந்திய அணி? டிச.26 முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்!

IND vs SA இடையிலான உலக கோப்பை டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு முறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்திய அணிக்கு சிறந்த வாய்ப்பு:

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு வரலாறு படைக்கும் பலம் உள்ளது நாம் அறிந்ததே. உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி 6வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதவுள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியா தொடரை கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த IND vs NZ டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. அந்த வெற்றியோடு தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

இந்தியாவில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? தீவிரமடையும் ஒமிக்ரான் பாதிப்பு! பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!

2018 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில், இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த தொடரில் இந்திய அணி செஞ்சூரியனில் வெற்றி பெறுவதற்கு நல்ல நிலையில் இருந்தது. ஆனால் 2018 இல் இங்கிலாந்தில் செய்ததைப் போலவே முக்கிய தருணங்களில் வீரர்கள் தடுமாறியதால் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. இம்மாதம் தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் – ஜன.12 முதல் இயக்கம்!

தென்னாப்பிரிக்கா எப்போதுமே இந்தியர்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய கடினமான இடமாக இருந்து வருகிறது. வேகம் மற்றும் பவுன்ஸ் ஆஸ்திரேலியா மைதானத்தில் இருப்பது போலவே தென் ஆப்பிரிக்காவிலும் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய பௌலர்கள் போல அவர்கள் எல்லா நேரத்திலும் பந்து வீசுவதில்லை. இந்த முறை இந்திய அணியின் பௌலிங் யூனிட் சிறப்பாக இருக்கிறது. எனவே தென் ஆப்பிரிக்கா மைதானங்கள் இந்திய பௌலர்களுக்கு பந்துவீச சாதகமாக அமையும் என்றும் இந்திய அணி இம்முறை தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!