இந்தியாவில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? தீவிரமடையும் ஒமிக்ரான் பாதிப்பு! பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!

0
இந்தியாவில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? தீவிரமடையும் ஒமிக்ரான் பாதிப்பு! பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!
இந்தியாவில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? தீவிரமடையும் ஒமிக்ரான் பாதிப்பு! பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!
இந்தியாவில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? தீவிரமடையும் ஒமிக்ரான் பாதிப்பு! பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!

இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் வழக்குகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பள்ளிகள் மூடல்

நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் ஒமிக்ரான் வைரஸ் மாறுபாட்டினால் இதுவரை 350க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சிறியது என்று கருதினாலும், அதிவேகமாக பரவும் திறன் கொண்ட இந்த ஒமிக்ரான் மாறுபாடு மெதுவாக நாடு முழுவதும் ஆட்கொள்ளும் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் மாநிலங்கள் தோறும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்தாத பள்ளி மாணவர்கள் மீது ஒட்டுமொத்த கவனமும் திரும்பி இருக்கிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் – ஜன.12 முதல் இயக்கம்!

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதால், இந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே 20 மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

இருப்பினும், இந்த ஒமிக்ரான் மாறுபாடு புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மாணவர்களின் பெற்றோர்களிடைய ஒரு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளை மூட வேண்டும் என்று பல பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் டெல்லி, மும்பை, தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற இடங்களில் அதிகமாக பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் இந்த மாநிலங்களில் தான் ஒவ்வொரு நாளும் புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன.

இப்போது பள்ளிகளை மூடுவது குறித்து டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆனந்த் குமார் கூறுகையில், ‘நாட்டை மூன்றாவது அலை தாக்குவதாக செய்திகள் வருகின்றன. அதற்கு நாங்கள் தயாராக இல்லை. என் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டேன். அது மிகவும் ஆபத்தானது. அதனால் அரசு, பள்ளிகளை விரைவில் மூட வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும் மும்பை ஜான்கிதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர், ‘பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது. நகரத்தில் சில ஒமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை முதல் விடுமுறை!

ஆனால் அவர்கள் அதை முக்கியமாக நினைக்கவில்லை. எங்கள் பிள்ளைகள் கற்றல் இழப்புக்கு ஆளாகக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இருந்தாலும் அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநிலம் 88 ஒமிக்ரான் நோய்த்தொற்று பாதிப்புகளுடன் முன்னணியில் உள்ளது. டெல்லியில் 67, தமிழ்நாட்டில் 33, தெலுங்கானாவில் 14 என மொத்த பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் ஒமிக்ரான் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!