தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – மாணவர்கள் கவனத்திற்கு!

0
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு - மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு - மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – மாணவர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் வருகிற ஜூலை 18ம் தேதி அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறைக்கு மக்கள் தொடர்புத் துறை சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு நாள்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான, பேரறிஞர் அண்ணா மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி கடந்த 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். இதற்காக ஜூலை 18ம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஜூலை 18ம் தேதி அன்று “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஜூலை 18ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை சிறப்பாக கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட தனித்திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து இவ்விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில், அனைத்து பள்ளிகளுக்கும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் பெயர் திருத்தம்? அறிவிப்பு வெளியீடு!

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான முக்கிய சுவரொட்டிகள் தயார் செய்து அனைத்து பள்ளிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு தேவையான சுவரொட்டிகள் தயார் செய்து கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக soft copy பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை சுவரொட்டியாக தயார் செய்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அரசு துணை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!