ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று குறைதீர் முகாம்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்று குறைதீர் முகாம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்று குறைதீர் முகாம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று குறைதீர் முகாம்!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் குறைகள், மற்றும் ரேஷன் கார்டு திருத்தங்கள் மேற்கொள்ள இன்று குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறை தீர்க்கும் முகாம்:

இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்குவதற்க்காக நியாய விலைக்கடைகள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் அரசு மக்களுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதை தவிர மத்திய அரசின் அனைத்து உதவிகளும் ரேஷன் கார்டு மூலம் கிடைக்கிறது.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவர்களின் குறைகளையும், சேவைகள் குறித்த விண்ணப்பங்களையும் கேட்டறிய மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை விண்ணப்பம், திருத்தங்கள் மேற்கொள்வதற்காக சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெறவிருக்கிறது. மேலும் இந்த குறைதீர் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு

Exams Daily Mobile App Download

நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றையும் இந்த முகாமில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக உதவி ஆணையாளர்களின் அலுவலகங்களில் நடைபெறுகிறது. மேலும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை தலைமை மண்டல ஆய்வாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!