தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், இந்த வாரத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும் சேர்த்து 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை:
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கீழ் தான் செயல்பட்டு வருகின்றன. மேலும், ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளுக்கும் எத்தனை நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகின்றன. எப்போதும் வங்கிகளுக்கு இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த பண்டிகை தின விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்துவதில்லை. இதனால், வங்கிகளுக்கு செல்ல திட்டமிடும் போது எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை அறிந்து வங்கிகளுக்கு செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின் படி இன்று முதல் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வங்கி விடுமுறை நாட்களில் கூட ஆன்லைன் பேங்கிங் சேவைகள் மற்றும் ATM சேவைகள் வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் – ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்!
ஆகஸ்ட் 13: இன்று தேசபக்தர் தினம் காரணமாக இம்பால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 14: ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) காரணமாக பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு
Exams Daily Mobile App Download
அடுத்த வாரத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை நாட்கள் இதோ,
ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வத்-8), கிருஷ்ண ஜெயந்தி காரணமாக அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி காரணமாக ஹைதராபாத் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 21: ஞாயிறு விடுமுறை
Very useful information
Thanks so much
Your information are very useful