SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய சேவைகள் அறிமுகம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய சேவைகள் அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய சேவைகள் அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய சேவைகள் அறிமுகம்!

SBI வங்கி சேவை தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள வாடிக்கையாளர் சேவை எண் என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் எந்தெந்த விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்பதற்குரிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி:

நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. அவ்வப்போது வாடிக்கையாளர்கள் பலன் பெரும் வகையில் பல சிறப்பான சேவைகளையும் அறிமுகம் செய்து வருகிறது. கிட்டதட்ட 45 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் SBI வங்கியின் சேவைகளால் பயனடைந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் இந்த சேவை தொடர்பான விளக்கங்களை உடனே பெறவும் வழிவகை செய்துகொடுக்கப்படுகிறது. அதற்காகவே SBI வங்கி வாடிக்கையாளர் சேவை எண் என்கிற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் வரும் 7ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதாவது, SBI வங்கி அறிவித்துள்ள ஒரு போன் கால் மூலமாகவே வாடிக்கையாளர்கள் SBI வங்கியின் சேவை குறித்தான அனைத்து விளக்கத்தையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். அதாவது, SBI வங்கி வாடிக்கையாளர்கள் 1800-1234 அல்லது 1800-2100 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான விளக்கத்தை கேட்டறிந்து கொள்ளலாம். தற்போது என்னென்ன விளக்கங்களை இந்த் எண் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

அதாவது, வங்கி கணக்கின் பேலன்ஸ், ஏடிஎம் கார்டு பிளாக் ஆகி விட்டாலோ, புது ஏடிஎம் கார்டு பற்றிய விவரங்கள், செக் புக் நிலவரம், சேமிப்பு வட்டி விவரங்கள், டிடிஎஸ் தகவல்கள், மினி ஸ்டேட்மெண்ட் ஆகிய அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மட்டுமே வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SBI வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண் திட்டத்தை போலவே அனைத்து வங்கிகளிலும் இத்தகைய வசதி வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!