RRB குரூப் D தேர்வுக்கு தயாராவோருக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி வெளியீடு!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு குரூப் D தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது தேர்வு நடைபெறும் தேதி வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது
RRB குரூப் D தேர்வு:
ரயில்வே துறையில் 7-வது மத்திய ஊதியக் குழு பே மேட்ரிக்ஸின் நிலை-1ன் கீழ் உள்ள 1,0,3769 பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குரூப் D தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த தேர்வில் கலந்து கொள்ள 1.15 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த தேர்வானது எப்போது நடைபெறும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அதற்கான தேதி தற்போது வெளியாகி இருக்கிறது. அனைத்து RRB இணையதளங்களிலும் குரூப் D தேர்வு தேதியை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் படி குரூப் D தேர்வானது ஜூலை கடைசி வாரம் நடைபெறும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 17முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கூற்றின்படி, இந்த தேர்வானது ஜூலை 17 முதல் ரயில்வே குரூப் டி ஆட்சேர்ப்பு தேர்வு பல கட்டங்களாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்பது குறித்தும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் – 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
அந்த வகையில் ஒவ்வொரு தேர்வு நடைபெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு RRB தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆகஸ்ட் 13 அல்லது ஆகஸ்ட் 14 முதல் நான்கு நாட்களுக்கு முன்னதாக ஹால் டிக்கெட் வெளியாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் RRB இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். RRB குரூப் D தேர்வு செயல்முறை 3 நிலைகளில் நடைபெறுகிறது. முதலில் கணினி அடிப்படையிலான சோதனை (CBT), இரண்டாவதாக உடல் திறன் சோதனை (PET) மற்றும் மூன்றாவதாக ஆவண சரிபார்ப்பு (DV) ஆகியவை ஆகும்.
இந்த தேர்வில் கணினி அடிப்படையிலான தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்த CBT 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். RRB குரூப் D தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும், அதன் படி 3 தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். இந்த தேர்வில் உள்ள அனைத்து வினாக்களையும் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு 90 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த தேர்வில் 25 கேள்விகளும், பொது நுண்ணறிவு மற்றும் ரீசனிங்கில் இருந்து 30 கேள்விகளும், பொது அறிவியலில் இருந்து 25 கேள்விகளும், பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு விவகாரங்களில் இருந்து 20 கேள்விகளும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.