LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – டெலிவரி கட்டணம் அவசியமா?

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு - டெலிவரி கட்டணம் அவசியமா?
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு - டெலிவரி கட்டணம் அவசியமா?
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – டெலிவரி கட்டணம் அவசியமா?

இந்தியாவில் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்த்து வருகிறது. இந்த நிலையில் இதற்கான டெலிவரி கட்டணம் வாடிக்கையர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

சிலிண்டர் கட்டணம்:

இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. மத்திய அரசு சார்பாக பிரதமரின் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒரு வருடமாக சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை தொடர்ந்து அதிகரிக்கும் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதற்கு மத்தியில் ஒரு வீடு உபயோக சிலிண்டர் விலை ரூ.1000 ஐ தாண்டியுள்ளது. மேலும் சிலிண்டர் விலையுடன் சேர்த்து டெலிவரி கட்டணமும் சேருவதால் சிலிண்டரின் விலை வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் வெவ்வேறு முறையில் சிலிண்டர் விநியோக ஊழியர்களுக்கு டெலிவரி கட்டணம் கொடுக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் சிலிண்டர் டெலிவரிக்கு என தனி கட்டணம் என்பது கிடையாது. சிலிண்டர் விலையுடன் டெலிவரி கட்டணமும் உள்ளாகியது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய் டிவி ப்ரியங்கா – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

சிலிண்டர் கட்டணம் தவிர நாம் செலுத்தும் கூடுதல் பணம் நாமாக விருப்பப்பட்டு கொடுக்கும் டிப்ஸ் ஆகும். அது கட்டாயம் கிடையாது. 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே டெலிவரிக்கு கட்டணம் கிடையாது. 5 கிலோமீட்டருக்கு மேல் டெலிவரிக்கு 30 ரூபாய் மட்டுமே டெலிவரி கட்டணம். இது வாடிக்கையாளர்களுக்கு தெரியாது என்பதால் ஊழியர்கள் 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் பெறுகின்றனர். மேலும் டெலிவரியே இல்லாமல் நாமாக சென்று சிலிண்டரை பெற்றுக்கொண்டால் டெலிவரி கட்டணம் கிடையாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!