12ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு தேதி வெளியீடு!
கர்நாடக மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 16 முதல் பொதுத்தேர்வு தொடங்கும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் படிப்படியாக பள்ளிகள் திறக்க தொடங்கியது. வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக கொரோனா மூன்றாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. அதனால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி வெளியாகி உள்ளது.
நடுக்கடலில் பிறந்தநாள் பார்ட்டி வைத்த “பாக்கியலட்சுமி” இனியா – வைரலாகும் வீடியோ!ரசிகர்கள் வாழ்த்து!
கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று முதலில் கர்நாடக மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. அதனால் அம்மாநிலத்தின் இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகளிலும் திறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 16ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.