நடுக்கடலில் பிறந்தநாள் பார்ட்டி வைத்த “பாக்கியலட்சுமி” இனியா – வைரலாகும் வீடியோ!ரசிகர்கள் வாழ்த்து!

0
நடுக்கடலில் பிறந்தநாள் பார்ட்டி வைத்த
நடுக்கடலில் பிறந்தநாள் பார்ட்டி வைத்த "பாக்கியலட்சுமி" இனியா - வைரலாகும் வீடியோ!ரசிகர்கள் வாழ்த்து!
நடுக்கடலில் பிறந்தநாள் பார்ட்டி வைத்த “பாக்கியலட்சுமி” இனியா – வைரலாகும் வீடியோ!ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா மேனனிற்கு நேற்று பிறந்தநாள் என்பதால் சீரியல் நட்சத்திரங்கள் அவருக்கு சப்ரைஸ் செய்து இருக்கின்றனர். அது பற்றிய வீடியோ ஒன்றை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பாக்கியலட்சுமி இனியா:

பாக்கியலட்சுமி சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய நினைத்து வக்கீல் வரை சென்று இருக்கிறார். மறுபக்கம் எல்லா உண்மையும் தெரிந்த ராமமூர்த்தி பக்கவாதம் வந்து பேசமுடியாமல் இருக்கிறார். இப்படி கதைக்களம் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது பள்ளி மாணவியாக இனியா கதாபாத்திரத்தில் காதல் காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன. இனியா கதாபாத்திரத்தில் நடிகை நேஹா மேனன் நடித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

இவர் பல முன்னணி சீரியல்களில் பள்ளி மாணவியாக நடித்து வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மூன்றாவது பெண்ணாக நடித்து வருகிறார். கோபி இனியா மீது அதிகமான பாசம் வைத்து இருக்கிறார். அதனால் தான் பாக்கியாவை விட்டு அவர் பிரிய மனமில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் இனியாவாக நடிக்கும் நேஹா மேனனிற்கு நேற்று 20 வது பிறந்தநாள். அதனால் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் சீரியல் நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

IPLல் சிஎஸ்கே அணிக்காக விளையாட விரும்புகிறேன் – தினேஷ் கார்த்தி பேட்டி!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இனியா தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவருடைய நண்பர்கள் பிறந்தநாள் விழாவில் சப்ரைஸ் செய்து இருக்கின்றனர், மேலும் நடு கடலில் படகில் சென்று கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அவருடன் பாக்கியலட்சுமி ஜெனியாக நடிக்கும் திவ்யா கணேஷ் இருக்கிறார். இந்த வீடியோவில் பல ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!