முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-15

0

காமராஜர் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஜூலை 15, 1903ல் விருதுநகரில் பிறந்தார்.

பெற்றோர்: குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள்

சிறப்பு:

 • தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்.ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.
 • தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
 • காமராஜரின் அரசியல் குரு: சத்தியமூர்த்தி
 • தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர்,பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர்.இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
 • காமராசரின் மறைவுக்கு பின் 1976ல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.
 • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார்.அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
 • அடுத்த ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார்.1940ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
 • தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது.
 • இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 • கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
 • அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
By Tshrinivasan (cropped from file) [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], via Wikimedia Commons

காமராஜர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

 • பாரத மிகு மின் நிறுவனம்
 • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
 • மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
 • இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
 • நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
 • கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
 • மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
 • குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.

இறப்பு:

 • 2 அக்டோபர் 1975ல் இறந்தார்.

மறைமலை அடிகள் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஜூலை 15,1876ல் திருக்கழுக்குன்றத்தில் பிறந்தார்.

இயற்பெயர்: வேதாசலம்

சிறப்பு:

 • புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.
 • உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர்.
 • சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
 • 1905ல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார்.
 • இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912ல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றினார்.
 • திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார்.
 • மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.

நூல்கள்:

 • முனிமொழிப்ப்ரகாசிகை – 1899
 • மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) – 1977
 • கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) – 1921
 • குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) – 1911
 • மறைமலை அடிகள் கடிதங்கள் – 1957
 • அறிவுரைக் கொத்து – 1921
 • அறிவுரைக் கோவை – 1971
 • உரைமணிக் கோவை – 1972
 • கருத்தோவியம் – 1976

இறப்பு:

 • செப்டம்பர் 15, 1950ல் இறந்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!