TNPSC 7ம் வகுப்பு முடித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC 7ம் வகுப்பு முடித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC 7ம் வகுப்பு முடித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC 7ம் வகுப்பு முடித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் 2023 ஆண்டுக்கான 8 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் இந்திய அரசால் நிறுவப்பட்டு வரும் இராணுவக் கல்லூரி இருக்கிறது. அந்த இந்திய ராணுவ கல்லூரியில் 2023 ஆண்டுக்கான 8 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 8 ஆம் வகுப்பில் சேர தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இந்த ராணுவ கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் 7 ஆம் வகுப்பு படித்தவர் அல்லது 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு – TRB முக்கிய அறிவிப்பு!

மேலும், விண்ணப்பிக்க விரும்பும் மாணவர் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கு பின்பு பிறந்தவராகவும், 2011 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும், அந்த மாணவரின் பெற்றோர் மற்றும் விண்ணப்பதாரர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பை விரைவு அஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

மே 25 முதல் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

பொது பிரிவினர் ரூ.600 க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் ரூ.555 க்கு வரையோலை எடுத்து அந்த ராணுவ கல்லூரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும். மேலும், இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-03 என்கிற முகவரிக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், இதற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!