தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு வழங்கல்துறை ஆணையர் சுற்றறிக்கை!

2
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - உணவு வழங்கல்துறை ஆணையர் சுற்றறிக்கை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - உணவு வழங்கல்துறை ஆணையர் சுற்றறிக்கை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு வழங்கல்துறை ஆணையர் சுற்றறிக்கை!

தமிழகத்தில் ரேஷன் அட்டையில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்குமாறு மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலம் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவைகளை பெற்று பயனடைகின்றனர். மேலும் பயிறு வகைகள், பனைவெல்லம் போன்றவை வழங்கப்படும் என்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் இல்லத்தரசிகளுக்கு வழங்கவுள்ள 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்காக புதிய ரேஷன் கார்டுக்கு ஏராளமானோர் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.

டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் ஆட்டோ பயண கட்டண உயர்வு – அரசு உத்தரவு!

விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து ரேஷன் கடையில் மாதந்தோறும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் இறந்தால் அவரது பெயர் நீக்கப்பட்டு பொருட்கள் குறைக்கப்படும். இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்படாமல் உள்ளது. இதனால் இறந்தவர்களுக்கும் சேர்த்தே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.

நவ.15 முதல் பள்ளி, கல்லூரிகளில் 100% மாணவர்களின் வருகைக்கு அனுமதி – அமைச்சகம் ஒப்புதல்!

இதன் மூலம் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் அட்டையில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரி உணவு வழங்கல் துறை ஆணையர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு வழங்கல் துறை அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் இறந்தவர்களின் பெயர்களை பொதுவினியோக திட்ட இணையத்தில் இருந்து நீக்க வேண்டும். இறந்தவர்களின் பெயரை நீக்கம் செய்வது குறித்த சிறப்பு குறிப்புடன் பரிந்துரை அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணை மாற்றுவதற்கான வழி ஆன்லைன் மூலம் இருக்கவேண்டும்

  2. குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணை மாற்றுவதற்கான வழி ஆன்லைன் மூலம் இருக்கவேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!