‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து வில்லி பரினா விலகல்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து வில்லி பரினா விலகல்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து வில்லி பரினா விலகல்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து வில்லி பரினா விலகல்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினாவுக்கு தற்போது பிரசவ காலம் நெருங்கி இருப்பதால் அவர் சீரியலை விட்டு விலகி இருப்பதாக வெளியான தகவல்கள் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பரினா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகளவு ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் என்றால் அது ‘பாரதி கண்ணம்மா’ தான். பல்வேறு தடைகளை தாண்டி சுமார் 600 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வெற்றிக்கு அதன் நடிகர், நடிகைகளும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். ஏனென்றால் இந்த சீரியலின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் ஏற்ற நடிப்பை கொடுத்து ‘பாரதி கண்ணம்மா’ வை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்த பெருமை அதன் நடிகர், நடிகைகளுக்கும் உரித்தானது.

‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு நடிகை ஆலியா மனசா பெறும் சம்பளம் – வாய் அடைத்து போன ரசிகர்கள்!

இப்படி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருடன் வெண்பாவும் ஒரு முக்கியமான நபர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வெண்பா இல்லாவிட்டால் பாரதி, கண்ணம்மா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்காது. இந்த சீரியலும் 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. அந்த வகையில் ரசிகர் பெருமக்களின் ஏகப்பட்ட ஏச்சுகளையும், விமர்சனங்களையும் வாங்கி கொண்டு வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இப்போது இந்த சீரியலில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினாவுக்கு பிரசவ காலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதால் இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு சீக்கிரத்தில் விலகுவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த செய்திகள் வெளியாகி பல வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை பரினா விலகி இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

சரஸ்வதி மீது பழிபோடும் சந்திரலேகா, திட்டமிட்டு காப்பாற்றும் தமிழ் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

இந்த தகவலை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவின் வீட்டு வேலைக்காரியாக சாந்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை புஷ்பா உறுதி செய்துள்ளார். அதாவது நடிகை புஷ்பா தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஒரு படப்பிடிப்பு வீடியோவை பதிவிட்டு மிஸ் யூ பரினா என அவரை டேக் செய்துள்ளார். என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை பரினா விலகும் பட்சத்தில் இந்த கதைக்களத்தில் அடுத்து எந்தவிதமான திருப்பங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!